பக்கம்:கல்வி உளவியல்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்றல் 211 கில்பாட்ரிக் கண்ட தன்ளுேக்க முயற்சிமுறை செயலை அடிப்படை யாகக் கொண்டது. இதில் நான்கு படிகள் உள்ளன. முதலாவது: நோக்கம். மாளுக்கர்களே தங்கள் திறமைக்கும் கிலேமைக்கும் பொருத்தமான ஒரு செயலேத் தேர்ந்தெடுத்துக் கொள்வர். ஆசிரியர் இதற்கு வழிகாட்டுவார். இரண்டாவது : தி ட் - மி - ல். ஆசிரியர் வழிகாட்ட மானுக்கர்களே அச் செயல்த் திறனுடன் முடிக்கும் வழிமுறைகளை ஆராய்வர். மூன்ருவது: செய்து முடித்தல். இதுதான் மாளுக்கர்கட்கு உற்சாகத்தை அளிப்பது ; இதில் காலமும் ஆற்றலும் வீணுகாமல் கண்காணித்து வருவது ஆசிரியரின் கடமையாகும் ; செயலி லிருந்து வழிவிலகிப் போகாது விழிப்புடனிருந்து அதை முற்றமுடியக் கொண்டு செலுத்த வேண்டும். நான்காவது : சீர்துக்கல் அல்லது மதிப் பிடல். இதிலும் ஆசிரியர் தலையீடு கூடாது; மானுக்கர்களைக் கொண்டே திறயைச் செய்தல் வேண்டும். சுருங்கக்கூறின், இக் கான்கு படிகளையும் தேர்ந்தெடுத்துத் திட்டமிட்டுச் செய்ததற்பின் சீர்தூக்கி ஆய்ந்தறிதல் காற்படிகள் ஆம். என்ற குறட்பாவில் அடக்கி நினைவில் வைத்துக் கொள்ளலாம். செயல் திட்டத்தின் நிறைகள் : செயல் திட்டத்தின் பயன்கள் பல. இத்திட்டம் செயல்முறை உளவியலைப் பற்றுக்கோடாகக் கொண் டது. அறிவு, திறன், ஒழுக்கம் முதலிய பண்புகள் உண்மைப் பிரச்சினை களுக்குத் தீர்வு காண்பதளுல்தான் வளர்கின்றன என்பது உளவியலாரின் கருத்து. செயல் திட்டம் மாணுக்கரின் நோக்கத்தின் அடிப்படையில் அமைந்தது ; ஆகவே, அதில் அவன் அக்கறை கொள்வது இயல்பு. இத்திட்டம் மாளுக்கர்கட்கு உண்மையாகக் காணப்படுகின்றது; எளிதில் விளங்கவும் செய்கிறது. அதன் முடிவுகள் தெளிவானவை; விரும்பத் தக்கவை. இக்காரணங்களால் மாளுக்கனே திட்டம் வகுத்து நடத்து வது கல்லதென்று கருதப்பெறுகின்றது. செயல் திட்டம் தனிப்பட்ட தாயிருப்பின், அது தனியாள் வேற்றுமைகளே அனுசரிக்கின்றது : குழுத் திட்டமாயிருப்பின், அது சமூகப் பண்பாகிய கூட்டுறவினை வளர்க் கின்றது. சில குறைபாடுகள் : இத்திட்டத்தில் சில குறைகளும் உள்ளன. முதல்தரமான திட்டத்தை எளிதாகவும் விரைவாகவும் வகுக்க முடி யாது. ஏற்கெனவே வேலை நெருக்கடியால் அல்லலுறும் ஆசிரியர் மேலும் அதிக நேரத்தை இதில் செலவழிக்க வேண்டியிருக்கின்றது. எவ்வளவு சிந்தனை செய்து திட்டம் வகுக்கப்பெறினும், திட்டத்தில் சில இடை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/233&oldid=778002" இலிருந்து மீள்விக்கப்பட்டது