பக்கம்:கல்வி உளவியல்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 கல்வி உளவியல் சமூக நிகழ்ச்சிகளால்தான் சிந்தனை பெரும்பாலும் வளர்கின்றது. எடுத் துக்காட்டாக ஒரு குழந்தைக்கு விடுக்கப்பெறும் வி ைஅதனைச் சிந்திக் கத் தூண்டுகின்றது. அது, தான் கண்டதையும் தனக்கு வேண்டியதையும் உரைக்கும்பொழுது சிந்தனை செயற்படுகின்றது. கலந்தாய்தலும், வாத மும் வளர்ந்தவர்களிடம் சிந்தனையைத் தூண்டுகின்றன. சைகைகளும் ஓவியங்களும்கூட மொழியாகும். ஒவியங்கள் அல் லது சைகைகளின் ஏற்பாட்டை அறிந்தவர்கள் அவற்றைக்கொண்டு எண்ணங்களைத் தெரிவிக்கலாம். (எ.டு.) சாரணப் படையினர் கையா ரூம் சைகைகள் : புகைவண்டி கிலேயங்களில் கையாளப்பெறும் கைகாட் டிகள், சிவப்பு பச்சைக் கொடிகள். அச்சுப் புத்தகங்களில் அச்சிடப் பெற்றிருக்கும் எழுத்துக்கள் படிக்கும் திறமையுடையோருக்கெல்லாம் கருத்துக்களைத் தெரிவிக்கின்றன. s ஆதிகாலத்தில் மொழி வளர்ந்த வளர்ச்சிப்படிகளை மொழிவரலாறு எடுத்துரைக்கின்றது. அந்த வளர்ச்சிப்படிகளைக் குழந்தையின் மொழி வளர்ச்சியிலும் நாம் காண்கின்ருேம். சிறுவன் முதலில் சொற்களைக் கற்கின்றன் ; பிறகு சொற்ருெடர்களைக் கற்கின்ருன்; அதன் பிறகு அவற்றை எழுத்துக்களால் குறிக்கக் கற்கின் ருன்.

  • இரண்டாம் உலகப் பெரும்போர்' என்பதைப்பற்றி நாம் சிந்திப் பதாக வைத்துக்கொள்வோம். அங்ங்ணம் எண்ணுங்கால் பெரும்பாலும் சொற்களையே கையாளுகின்ருேம். விமானம், அணுகுண்டு, குண்டு வீச்சு, கடும்போர், ஹிரோஷிமா, நாகசாகி போன்றவைகளின் சாயல் களையும் சிந்தனையில் பயன்படுத்துகின்ருேம். ஆகவே, சிந்தனையும் மொழியும் நெருங்கிய தொடர்புடையவை. எண்ணங்கள் வளர வளர மொழியும் வளர்ச்சி பெறுகின்றது. புதிய புதிய சொற்கள் ஏற்படுகின் றன. மேல்நாட்டு அறிவியல்களைத் தமிழில் எழுதுவதல்ை தமிழில் புதிய ஆக்கச் சொற்கள் ஏற்படுகின்றன. தமிழ்மொழி சொல்லும் திறமையைப் பெறுகின்றது. எனவே, மொழியைக் கொண்டே பெரும் பாலும் சிந்தனை நடைபெறுகின்றது; சொற்கள் சிந்தனையின் கருவி களாகத் துணைபுரிகின்றன. அவை முதியோரின் சிக்கலான சிந்தனைகளுக் கும் வெற்றுக் கருத்துக்களுக்கும் மிகுதியாகப் பயன்படுகின்றன.

சிந்தனையைத் தூண்டும் நிலைகள்: பெரும்பாலும் இவை தனி யாளின் சூழ்நிலையையோ அல்லது ஆளுமையையோ பொறுத்தவை. முதலாவது : , சிலவகை நிலைமைகள் சிந்தனையைத் தூண்டும். நம் கண்ணுக்கு முன்னர் விரைவாகவும் பெருவிளைவு பயக்க வல்லனவுமான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/274&oldid=778092" இலிருந்து மீள்விக்கப்பட்டது