பக்கம்:கல்வி உளவியல்.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடல் நலமும் உடல்நல வியலும் 327 பால்பற்றிய விளுக்கள் மூத்தோர்க்கே உரியவை. சிறுவர்கள் அவற்றை அறியின் அதிவிரைவில் காமக்கடலில் மூழ்கிப் பிஞ்சில் பழுக்க நேரிடும். பொதுக்கல்வி பெறுவதிலும் அவர்கள் ஊக்கத்தை இழந்து விடுவர். ஆகவே, பால் கல்வி அறவே கூடாது என்பது. முடிவு : இது மிகச் சிக்கலான பிரச்சினையே. எனினும், அறவே ஒழித்துவிடுவதால் நாம் எதிர்பார்க்கும் பலனை எய்திவிடுவதில்லை. நாம் மறைத்தாலும் அவர்கட்குப் பால்பற்றிய தகவல்கள் எட்டா என்று சொல் வதற்கும் இல்லை. த.வருண தகவல்களை அவர்களே பெற்றுப் பாழ்படு வதைவிட, கரியான தகவல்களை நாமே தரும் பொறுப்பை மேற்கொண்டு அவர்களை கன்னெறியில் உய்ப்பது நம் கடமை. காதலுக்கத்தை உயர் மடைமாற்றம் செய்து நன்முறையில் திருப்பலாம் என்று முன்னரே விளக்கியுள்ளோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/349&oldid=778256" இலிருந்து மீள்விக்கப்பட்டது