பக்கம்:கல்வி உளவியல்.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3:46 கல்வி உளவியல் வெற்றி மனப்பான்மை ஆகியவையும் இவர்களிடம் நாளடைவில் ஏற் பட்டுத் திருந்துவர். - மூன்ருவதாகத் தம்முடைய நடத்தையினையும் அந்த நடத்தையைத் தூண்டும் ஊக்க நிலையையும்பற்றி உள்ளுணர்வு பெறுமாறு செய்தல் வேண்டும். அப்பொழுது தன்னடக்கம் பொலிந்து வரும். பெரும்பாலும் அறிவுக்குறைவுள்ள சிறுவர்கள் தீச்செயல்களில் இறங்குவதற்குக் கார ணம் அவர்கள் அறநெறிபற்றிய கருத்துக்களை உணர முடியாததே. பெரும்பாலான சிறுவர்களிடம் 12 வயது முடியும் வரையில் அக்கருத்துக் கள் அவர்கள் மனத்தில் படிவதில்லை என்று பினே’ ’யின் அறிதிறன் ஆய்வுகளால்** அறிகின் ருேம். நான்காவதாகச் சிறு பொறுப்புக்களை அவர்கட்கு அளித்தும் திருத்தலாம். பெரும்பாலான நெறிபிறழ்ந்த சிறுவர்கள் அதிகாரத்தை அடையவேண்டும் என்ற துடிப்புடன் காணப்பெறுவர். ஆசிரியர் பள்ளி வாழ்க்கையில் விளையாட்டுக் குழுத் தலைவர் போன்ற பதவிகளைத் தந்து அவர்கள் அவாவினைத் தீர்க்கலாம். இதல்ை அவர்கள் தம் குடும்பத்திற் குத் தலைவர்களாகவும் சமுதாயத் தொண்டர்களாகவும் இனிதே வாழ வழி அமையும். . ஐந்தாவதாகக் குழந்தையின் குடும்ப வாழ்க்கையைப்பற்றிய தக வல்களை அறிய வேண்டும். இதை ஆசிரியர் திறமையுடன் சமாளிக்க வேண்டும். பெற்ருேர்களை நேரில் சந்தித்துப் பேசுவதுதான் இதற்கு வழி. சில சமயம் பெற்றேர்கள் தம்முடைய குழந்தைகளைத் தாழ்த்திப் பேசுவ தைப் பொறுக்கமாட்டார்கள் : ன்பயன் தவறு செய்யவில்லை என்றும் சாதிப்பர். அன்புடனும் பரிவுடனும் அவர்களே அணுகித் தானும் பெற்றேர் களும் ஒத்துழைத்தால்தான் குழந்தையின் சங்கடங்களை அகற்றிக் குழந்தையை முன்னேற்ற முடியும் என்பதை அவர்கள் மனம் உணரச் செய்தல் வேண்டும். ஆருவதாகக் குழந்தை வாழும் சூழ்நிலையை மாற்றக்கூடுமா என் பதை ஆராயவேண்டும். தக்க தனிப்பட்ட பள்ளியிலோ, விடுதிகளிலோ அதனைப் பயிற்றுவிக்க முடியுமா என்பதைப் பெற்ருேர்களைக் கலந்து யோசிக்கவேண்டும், தற்காலிகமாக, ஒரு மகிழ்ச்சிச் செலவு, அல்லது ஒரு விடுமுறை தந்து குழந்தையின் வாழ்க்கையில் ஒரு புதிய தொடக் கத்தை உண்டு பண்ணலாம்.

  • Fear-Binet.* Eissper asiasi-intelligence tests.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/368&oldid=778300" இலிருந்து மீள்விக்கப்பட்டது