பக்கம்:கல்வி உளவியல்.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்பு பிறழ்ந்த நடத்தை 351 கும் பழக்கமுடைய குழந்தைகளுக்கு ஏற்படும் குறைகளை நீக்குவதுதான் மிகவும் கடினமாகும். இப் பழக்கத்தால் நேரிடும் உடல்பற்றிய விளைவினைவிட உள்ளம் பற்றிய கேடுதான் அதிகம். வயதுவந்த சிறுவர்கள் இதனைக் குறித்து காணப்படினும், இப்பழக்கத்தை விட்டுவிட முடியாதிருப்பதை உணருங் கால், தன்னம்பிக்கை இழந்து தங்களுக்கு அதிகக் கேட்டினை உண்டாக் கிக் கொள்வர். தாங்கள் பிறரிடம் உரையாடும்பொழுதும் சிரிக்கும்பொழுதும் தாங்கள் உள்ளங்கைகளை உதடுகளின்மேல் வைத்துத் தங்களுடைய ஒழுங்கற்ற பற்களை மறைத்துக்கொள்ள முயலுகின்றனர். இதனால் பிறருடன் எளிதாகப் பேசும் வாய்ப்பு குறைகின்றது. அவர்களுடன் பழகுவதில் தன் உணர்ச்சியும் ஏற்படுகின்றது. இப் பழக்கத்தைத் தடுத்தல்: இப் பழக்கம் குழவிப் பருவத்தின் தொடக்கத்தில் நடைபெறுவதைக் காண நேர்ந்தால், அது ஒரு பழக்க மாக ஆகாமலேயே தடுத்தல் கூடும்; குழந்தையின் கை வாய்க்கு எட்டா மல் ஏற்பாடு செய்து விடலாம். ஆனால், குழந்தை அப்பழக்கத்தை பிடிவாதமாக விரும்பி முயன்ருல், நம்முடைய தடை இப் பழக்கத்தினை விடக்கேடு விளைவித்தல் கூடும். குழந்தை நாம் நினைப்பதுபோல ஒரு பொறியன்று நம்முடைய விருப்பப்படி அதன் ஓர் உறுப்பினை இயக்க முடியாது. சில சிமயம் நாம் மேற்கொள்ளும் தடையால் நரம்பு இறுக்க மும் சினமும் ஏற்பட்டு அவற்ருல் குழந்தையின் உள வாழ்க்கை முழு வதும் பாதிக்கப்பெற்று விடும். சற்று வளர்ந்த குழந்தையிடம் ஒரு நல்ல இனிப்பைக் கொடுத்து அதனைச் சுவைக்கச் செய்து இப்பழக்கத்தை மாற்றலாம். இக் குழந்தையைத் தூக்கி வைத்துக்கொண்டு பலவிதமாகப் பராக்குக் காட்டிப் புற உலகில் அதன் கவனத்தைத் திருப்பிப் புதிய கவர்ச்சிகளை வளர்க்கலாம். இன்னும் சற்று வளர்ந்த சிறுவளுளுல் கைக்குத்தக்க வேலையைக் கொடுத்து இப்பழக்கத்தைத் தடுக்கலாம். தட்டுகள், பெட்டி கள், ஒன்றுக்குள் ஒன்று போகக்கூடிய கட்டைகள் அல்லது பாத்திரங் கள், போட்டுத் திறக்கக்கூடிய மூடிகளடங்கிய சாடிகள், திருப்பித் திருப்பிப் பார்க்கக்கூடிய கிழிக்கப்பெற முடியாத படங்களடங்கிய புத்தகங்கள், உள்ளே போட்டு வெளியில் எடுக்கக்கூடிய பொருள்க ளடங்கிய பெட்டிகள், குழந்தைகள் எளிதில் கையாளக்கூடிய வேறு விளையாட்டுப் பொருள்கள் போன்றவற்ருல் குழந்தைக்குக் கைவேலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/373&oldid=778311" இலிருந்து மீள்விக்கப்பட்டது