பக்கம்:கல்வி உளவியல்.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358 கல்வி உளவியல் பள்ளியிலும் இம்மாதிரியே செய்தல். குழந்தைக்குத் தேவையான பொருள்களையும் நாம் தேவை எனக்கருதும் அளவுக்குக் கொஞ்சம் பணத் தையும் கொடுத்து அதன் விருப்பத்தை நிறைவேற்றுதல். (ii) ஒரு சிறுவ னுக்கு ஒரு பொருள் மிகவும் இன்றியமையாததாக இருப்பின் அதை ஏற்ற வழிகளில் எப்படி எப்படிப் பெறலாம் என்று கற்பிக்கலாம். ஒழுங் காக வேலை செய்து ஒரு குறிப்பிட்ட வருவாயை அடையும் வழிகாட் டிஞல் சிறுவன் தொடர்ந்து திருடுவதை விட்டுவிடக்கூடும். இப் பொழுது படிப்படியாக அறநிலைக் கல்வியைக் கற்பித்தல் பயன்தரும். சிறுவன் கையிலேயே பணத்தைக் கொடுத்துச் சில பொருள்களை வாங்கி வரும் பொறுப்பையும், குடும்ப வரவு-செலவுக் கணக்கை எழுதிவரும் வாய்ப்பையும் தருதல் சிறந்த பயன் அளிக்கலாம். (iii) சில சமயங்களில் திருடுவதற்கும் குற்றம் புரிந்து மனநிறைவு கொள்ளும் மனப்போராட்டத் திற்கும் ஒருவித உறவு உண்டு. இந் நிலையில் மனப் போராட்டத்தை நீக்குவதற்குச் சிகிச்சை தருதல் வேண்டும். இதற்கு உளவியல்-மருத்து வரின் யோசனையும் வழியும் பெரும் பயன் தரும். ஊர்சுற்றுதல் (சோம்பித்திரிதல்) ஊர் சுற்றுதல்' ஆசிரியர்களின் கிர்வாகப் பிரச்சினைகளில் முக்கிய மானதொன்று. அச்சம், கூச்சம் ஆகியவற்றைவிட இது மிகவும் பொல் லாதது என்று சில ஆசிரியர்கள் கருதுகின்றனர். ஊர்சுற்றுபவன் பள்ளிக்குச் செல்வதை விரும்பாமல் வேறு செயல்களில் ஈடுபடுவதற்குத் திட்டம் போடுவான். அவன் மீன் பிடிக்கச் செல்லவும், படக்காட்சியைக் காணவும், சர்க்கஸ் பார்க்கவும், வெளியூர் செல்லவும் விரும்புவான். இவனுக்குத் தன்னுடைய சொந்த பொருத்தப்பாட்டில் பிரச்சினை இருக் கலாம்; அல்லது இராமல் இருக்கலாம். ஆயினும், பள்ளிப் பொருத்தப் பாட்டுப் பிரச்சினை இவனிடம் இருக்கின்றது என்பது உறுதி. காரணங்கள் : பள்ளி வேலைகளில் இருக்கும் கவர்ச்சியைவிட வேறு செயல்கள் அவனுக்கு அதிகக் கவர்ச்சியைத் தருதல்; (ii) பள்ளி யின் மீது வெறுப்பு, (iii) வேறு இடங்களில் தான் மேற்கொள்ளும் வேலை களில் மனநிறைவு பெறுதல்; (iv) குழந்தைகள் சரியான நேரத்தில் பள்ளிக்குச் செல்வதற்குரிய ஒத்துழைப்பு பெற்ருேரிடம் இல்லாமை (எ.டு) குளிப்பாட்டுதல், உணவு படைத்தல் போன்றவை தகுந்த நேரத்தில் செய்யப்பெருமை. -

    • ~ * & jbgy55ò-truancy.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/380&oldid=778324" இலிருந்து மீள்விக்கப்பட்டது