பக்கம்:கல்வி உளவியல்.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

362 கல்வி உளவியல் பின்னுமாக அசைத்துக்கொண்டும், முன் கையிலுள்ள 'ஜிப்பா பகுதி யைச் சுருட்டிக்கொண்டும் காது துளைக்கும்படி 'வந்துளேன் ஐயா, நான் சரியாக இருக்கிறேன் பாருங்கள்-துரைராஜ் வகுப்பில் சரியாகத்தான் இருக்கின்ருன்' என்று கத்தின்ை. வகுப்பிலுள்ளவர்கள் அனைவரும் நகைத்தனர்; தற்காலிகமான ஒருவித ஒழுங்கின்மை வகுப்பில் நிலவியது. அடுத்த நாளும் இதே பிரச்சினைதான். - ஆசிரியர் திரு. ப - ஒன்றும் சொல்லவில்லை; துரைராஜகவின் நடத்தையைப்பற்றி எதுவும் பேசவில்லை. வகுப்புவேளையின் இறுதியில் அவர், மாலையில் பள்ளிவிட்டதும் துரைராஜைத் தன் அறையில் தன்ரி யாகச் சந்திக்குமாறு கூறினர். ஒவ்வொருவரும் அங்ங்னமே தன்னைத் தனிமையில் காணவேண்டும் என்றும் அறிவித்தார். துரைராஜ் சந்திப்ப தாக ஒப்புக்கொண்டான்; சொன்னபடியே செய்தான். முதன் முதலில் துரைராஜ் ஆசிரியரைத் தனிமையில் சந்தித்த பொழுது அவன் சொன்னது: 'கான் சற்றுக் கடுமையானவன் என்பதைத் தாங்கள் அறிவீர்கள் என நினைக்கின்றேன். சென்ற யாண்டு நான் பயின்ற பள்ளியில் ஆசிரியர் ஒருவரைப் பள்ளியிலிருந்தே விரட்டி விட்டேன்’ என்பது, ஆசிரியர் திரு. ப- அதற்கு மறுமொழி ஒன்றும் கூறவில்லை. துரைராஜ் பேசிக்கொண்டே போனன். அவன் சொன்னன்: ' எனக்குத் தடித்த குரல் இருக்கின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள் என நினைக் கின்றேன்.” ஆசிரியர் திரு ப- தனக்குத் தடித்த குரலைப்பற்றிக் கவலை யில்லையென்றும், தான் தகரப்பெட்டித் தொழிற்சாலையில் வேலை செய்து பழக்கம் இருப்பதால் அவ்வொலி தனக்குப் பழக்கப்பட்டதுதான் என்றும் சொல்லி வாளா இருந்தார். பிறகு துரைராஜ் சொன்னன்: "நான் விரும் பினல் மெதுவாகவும் பேசமுடியும்” என்று. இதற்கு ஆசிரியர் திரு பநேரடியான பதில் சொல்லவில்லை. ஒரு மாளுக்கன் எவ்வளவு உரத்துப் பேசினலும் அதைப்பற்றித் தான் கவலை கொள்வதில்லை என்று மட்டிலும் பதில் கூறினர். துரைராஜு பிறரிடம் நன்கு. பழகவேண்டுமென்றும், அவனுடைய எதிர்காலத்தைப்பற்றிய திட்டத்தில் தான் துணை செய்ய விரும்புவதாகவும்,அவனுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் தான் துணைசெய்வதாகவும் அவர் கூறி, இதற்காகத்தான் தனிமையில் அவனி டம் பேச விரும்பினதாகவும் உரைத்தார். மேலும், அவர் அவனிடம் நாள் தோறும் வகுப்பில் பெயர்களை அழைப்பதால் யாதொரு பயனும் இல்லை என்றும், அதற்குப் பதிலாக இருக்கைப்படம்' ஒன்று ஆயத்தம்செய்து அதன்படி மாளுக்கரின் வருகையைச் சரிபார்த்தல் மேல் என்றும் தான்

  • o 9qỹảiao sử LIL-ử - Seating Chart.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/384&oldid=778332" இலிருந்து மீள்விக்கப்பட்டது