பக்கம்:கல்வி உளவியல்.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

386 கல்வி உளவியல் கள், வீடுகளுக்கு அனுப்பும் குறிப்புக்கள், பழைய மாளுக்கர்க் கழகக் கூட்டங்கள், தேர்ச்சி அறிக்கைகள் முதலியவை அனைத்தும் இந் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு மேற்கொள்ளப்பெறும் வாயில்கள் ஆகும். இவை ஒவ்வொன்றையும் பெற்ருேர் புரிந்து கொள்ள வேண்டும். புரியாத பெற்றேர்கட்குப் புரிய வைக்க வேண்டியது ஆசிரியர்களின் கடமை. குழந்தைகளின் வளர்ச்சி சிறந்த முறையில் பாதுகாக்கப்பெறவேண்டு மென்பதற்காகவே சமூகம் ஆசிரியர்கட்குத் தனிப் பயிற்சி அளித்து வருகின்றது என்பதை ஆசிரியர்கள் உணர்தல் வேண்டும். கிலத்த பயனைப் பெறவேண்டுமாயின், பள்ளி தொடங்கும் கல்வினைகள் அனைத்தும் வீட்டிலும் தொடர்ந்து நடைபெற வசதிகள் அளித்தல் வேண்டும். உடல்நிலை, பல் முதலியவற்றைப் பற்றிய உடல்நல வழிகளுடன், நல்ல நூல்கள், பருவ இதழ்கள், விளையாட்டுச் சாமான் கள் முதலியவை வீட்டிலும் கிடைக்க வேண்டும். வீட்டுப் பொறுப்புக் கள், கடமைகள், பணத்தைக் கையாளுதல், காய்கறிச் சந்தை, மளிகைக்கடை முதலியவற்றிற்குச் சென்று வருதல் போன்ற பொறுப்புக் களையும் சில சமயம் குழந்தைகட்கு அளித்தல் நற்பயன் விளைவிக்கும். இவை பள்ளி வேலைக்குப் பெருந்துணையாகவும் அமையும். குழந்தைகளைக் காலா காலத்தில் பள்ளிக்கு அனுப்புவது, பள்ளி யில் தரப்பெறும் வீட்டு வேலையை (home-work)ச் சரிவரச் செய்யச் சொல்லுவது, பள்ளி ஒழுங்கு முறைகளை கவனிக்கச் செய்வது போன்றவற்றில் பெற்றேர்கள் ஆசிரியருக்குப் பெருந்துணையாக இருத்தல் வேண்டும். குழந்தை வளருங்கால் அதன் ஒழுக்கத்தைப் பாதிக்கும் நிகழ்ச்சிகள் வீட்டிலும் எழலாம், பள்ளியிலும் எழலாம். வீட்டில் நடைபெறுபவை பள்ளி நடத்தையைப் பாதிக்கும்; பள்ளியில் நடைபெறுபவை வீட்டு நடத்தையைத் தாக்கலாம். பெற்றேர். ஆசிரியர் கூட்டுறவு, இத்தகையவற்றைப் புரிந்து கொள்ள வாய்ப்புக்கள் நலகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/408&oldid=778387" இலிருந்து மீள்விக்கப்பட்டது