பக்கம்:கல்வி உளவியல்.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392 கல்வி உளவியல் அமைத்துப் பின்னும் ஒரு முறை தொடர்மொழியைப் படித்துத் தொடர் மொழி சரியான பொருளைக் கொடுக்கின்றதா என்று பார்க்கும்படி அறி வுறுத்த வேண்டும். 1. முதல்வேற்றுமை womowa"*. - எனப் படும். 2. காங்கிரஸ் மகாசபை *- யாண்டில் ஏற் பட்டது. 3. வயிற்றில் ஊறும் செரிமான நீரின் பெயர் - 4. அயோடின் ல் கரையும். இணைக்கும் ஆய்வுகள் : இரண்டு வரிசைகளாகத் தொடர் மொழிகளை உண்மையும் பொருத்தமும் முறையும் பிறழ அமைத்து அவற்றைப் பொருத்தும்படி செய்தல் இணைக்கும் ஆய்வுகளாகும். கிகழ்ச்சிகள், அவை கிகழ்ந்த யாண்டுகள்; போர்கள், அவற்றை நடத்திய சேனைத் தலைவர்கள்; புலவர்கள், அவர்கள் இயற்றிய நூல்கள்; பழமொழி கள், அவற்றின் கருத்துக்கள்; மரபுத்தொடர்கள், அவற்றின் பொருள் கள் போன்றவற்றை இவ்வாறு பொருத்தச் செய்யலாம். காரண காரியங் களையும் வரிசைப்படுத்தலாம். குறித்த பொருளறிவைத் தேற இது சிறந்த முன்றயாகும், (எ.டு) கீழ்க்கண்டவற்றில் அ பிரிவிலுள்ளவற்றை ஆ’ பிரிவி லுள்ளவற்றுடன் பொருத்திக் காட்டுக. பகர வளைவிற்குள் விடையின் எண்ணை மட்டிலும் இட்டால் போதுமானது. அ-பிரிவு ஆ-பிரிவு அள்ளிக்கொட்டுதல் ( ) (அ) பயனற்றது ஆறப்போடுதல் [ } (ஆ) நஷ்டம் அடைதல் கையைக் கடித்தல் [ | (இ) மிகச்சம்பாதித்தல் ஒரு காலில் கிற்றல் [ ] (ஈ) விடாப் பிடியாயிருத்தல் குரங்குப்பிடி I j (உ) காலந்தாழ்த்தல் (ஊ) பொய்த் தோற்றம் இன ஆய்வுகள்: ஓர் இனம் அல்லது தொகுதியில் சேராத, அடங்காத சொற்களை அவ்வரிசையிலிருந்து அடித்துவிடும்படிச் செய்தல். அவற்றின் கீழ்க் கோடிட்டுக் காட்டும்படியும் கூறலாம். 12 Zäoré Go Süsssir - matching tests. 1.8 இன ஆய்வுகள் - classification tests.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/414&oldid=778400" இலிருந்து மீள்விக்கப்பட்டது