பக்கம்:கல்வி உளவியல்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 கல்வி உளவியல் என்பதை நாம் அறியவேண்டும். எடுத்துக்காட்டாக-நாம் ஒன்றினைப் பார்க்கின் ருேம் ; அதே சமயத்தில் கேட்கின்ருேம், நுகர்கின் ருேம், சுவைக்கின்ருேம். எனவே, பல பகுதிகளும் ஒருங்கு இணைந்தே செயற்படு கின்றன என்பது இதல்ை உறுதிப்படுகின்றது. மேற்சுட்டிய புலன் எல்லைகளைத் தவிர, இயக்க எல்லை என்ற ஒன்றும் உண்டு. அது நெற்றிப் பிரிவில் உள்ளது. கால், உடல், கை, முகம், தலை என்ற வரிசையில் இயக்கங்கள் அவ்விடத்தில் அமைக் துள்ளன. மேலே தோன்றுவது காலின் இயக்கம் கீழேதோன்றுவது தலையின் இயக்கம்; இடையே காண்பது உடலின் மற்றப் பாகங்களின் இயக்கம். (படம்-6) : பெருமூளையின் இடப்பகுதியின் பக்கவாட்டுத் தோற் றம். மூளையின் பகுதிகளையும் இயக்கத்திற்கும் புலன்களுக்கும் உரிய பகுதிகளைக் காட்டுவது. இவை தவிர, சிலபகுதிகளில் இயைபு நரம்புகள் 89 உள்ளன. கம் அனுபவங்களை இயைபுறுத்தலில் இந் நரம்புகள் ஈடுபடுகின்றன. பெரு மூளையே கனவுக்கு ' இருப்பிடம். இதையே மேல்மையம்’ ’ என்று வழங்குவர். சிறுமூளையையும் முதுகு நடுநரம்பையும் கீழ்மையங் கள்' என்பர். விருப்பச்செயல்கள்?’ யாவும் மேல் மையத்தாலும், அனிச் சைச் செயல்கள் யாவும்" கீழ்மையங்களாலும் ஆளப்பெறுகின்றன. வெளிநரம்பு மண்டலம் : இதில் மண்டை நரம்புகள், முதுகுவேர் கள், நரம்பு உடல்கள் ஆகியவை சேர்ந்துள்ளன. பொறியின் செயல்கள் பல பாதைகளின் வழியாகப் பரந்து நடுநரம்பு மண்டலத்தின் பல பகுதி களுக்கும் செல்லுகின்றன என்று மேலே கண்டோம். இவ் வுணர்ச்சிகளே எந்த இயங்குவாய்கள் செயற்பட வேண்டும் என்றும், அவை எவ்வாறு செயற்பட வேண்டும் என்றும் அறுதியிடுகின்றன. துலங்கல்கள் செம்மையாக அமைய வேண்டுமாயின் தூண்டலுணர்ச்சி இயங்குவாய் களுக்குக் கொண்டுவரப்பெறுதல் வேண்டும். வெளி நரம்பு மண்டலம் துலங்கல் இயற்றுவதற்கு வேண்டிய அலைவுகள் கூடும் பொதுவான இறுதி நரம்புப் பாதையாக அமைந்திருக்கின்றது. தூண்டலுணர்ச்சிகளும் துடிப்புக்களும் எங்கிருந்து வரினும், துலங்கல் நடைபெறுவதற்கு அவை இப் பாதை வழியாகவே தசை நார்களையோ & B goul Bribuésir-association nerves. • 9 issors—consciousness. zo €u &oleuth—higher centre. 7+ £pooloušissis —lower centres. 12 விருப்பச்செயல்கள்-voluntary actions, 18 அனிச்சைச் செயல்கள்involuntary actions.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/63&oldid=778602" இலிருந்து மீள்விக்கப்பட்டது