பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடிவழியும் சூழ்நிலையும் #43

களில் பாதியே கிடைக்கின்றது. சாதாரண உயிரணுப்பகுப்பில் நிறக்கோல்கள் இரட்டிக்கின்றன. ஆனால், குறைத்துப் பகுத்தல் செயலில் அவ்வினை நிறக்கோல்கள் பிரிந்து ஒவ் வொன்றும் சேய் உயிரணுவிற்குச் செல்லுகின்றது. பின்னர், ஆண் பெண் இனப்பெருக்க உயிரணுக்கள் இணையுங்கால் திரும்பவும் முழுநிறக்கோல்களின் தொகுதி கொண்ட உயிரணு பிறக்கின்றது. இது வே கருவுறுதல் என்பது. இவ்வாறு உருப்பெற்ற உயிரணு மீ ண் டு ம் பிரிந்து வளர்ந்து குழந்தையாகின்றது. இதனைப் படம் (படம்-23) விளக்கு கின்றது. மேற்கூறிய செய்திகளையும் இவற்றையும் ஒன்று சேர்த்து ஆராய்ந்தால், தனிச்சிறப்புக்குரிய ஒர் உண்மை நமக்குப் புலனாகின்றது. ஒவ்வோர் இணையிலுமுள்ள ஒரு நிறக்கோல் விந்தணுவிலிருந்து வந்தது: மற்றொன்று கருவுறு வதற்குமுன் முட்டையிலேயே இருந்தது. எனவே, ஒகு குழந்தை தன் உடலிலுள்ள உயிரணுவின் நிறக்கோல் இணையில் ஒன்றினைத் தந்தையிடமிருந்தும் மற்றொன்றினைத் தாயினிட மிருந்தும் பெறுகின்றது என்பது பெறப்படுகின்றது.

ஜீன்கள் : நிறக்கோல்களைப்பற்றி மேலே கண்டோம். ஒவ்வொரு நிறக்கோலிலும் குடிவழிக் கூறுகளைத் தாங்கிக் கொண்டிருக்கும் மிக நுண்ணிய உறுப்புகள் உள்ளன. அவற்றை ஜீன்கள் என வழங்குவர். ஜீன்களின் தொகுதியாலேயே நிறக் கோல்கள் அமைந்திருக்கின்றன. உயர்ந்த துண்ணணுப் பெருக்கியாலும் pனைத் தனியாகக் காண்பது அரிது. ஆற்றல்மிக்க நுண்ணணுப் பெருக்கினால் ஒரு நிறக்கோலை ஆராய்ந்ததில் அது கயிற்றில் கோக்கப்பெற்ற உருண்டை மணிகள்போல் காணப்பெறுகின்றது; முக்கியமாக, அஃது ஒரு திட்டமான ஒழுங்கில் அமைக்கப்பெற்ற ஜீன்களின் கோவையே, மானிட ஜீன்கள் கிட்டத்தட்ட ஆயிரத்திற்கு மேற்பட்டவை: அவை 46 நிறக்கோல்களிலும் சமமின்றி வினியோகிக்கப் பெற்றுள்ளன.

இணையாக உள்ள நிறக்கோல்களின் ஒர் இணையி லுள்ள ஒரு நிறக்கோலின் ஒரு ஜீன் அந்த இணையிலுள்ள மற்றொரு நிறக்கோலின் ஒரு ஜீனுடன் இணைந்துள்ளது. இந்த ஜீன்கள்தாம் ஒரே மாதிரியான முறையில் அல்லது மாறு பட்ட முறையில் ஒரே செயலைப் புரிகின்றன. ஒர் இணையி

37. §orsair-Genes. 38. glo-auts).} & Disch-Hereditary factors. 39. துண்ணணுப்பெருக்கி.Microscopy