பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 78

கல்வி உளவியல் கோட்பாடுகள்

ஆசிரியருக்குக் குறிப்பு: தண்டனைகளால் ஏற்படும் விளைவுகள் எங்ஙனம் குழந்தையின் நடத்தையை மாற்று கின்றன என்பதை ஆசிரியர்கள் அறிதல் வேண்டும். இவிை நிலைமைக்கு நிலைமை மாறுபடும். அடியிற்காணும் குறிப்புகள் ஆசிரியர்களுக்கு வழிகாட்டிகளாக அமையும். - 'r ;

(i)

(2)

(3)

ஆசிரியர்களுக்கும் மாணாக்கர்களுக்கும் இடையே நிலவும் சமூக உறவு முறை தண்டனையின் விளைவு களை அறுதியிடும். மாணாக்கர்களால் விரும்பப் பெறாத ஆசிரியரிடம் தோன்றும் சிறுகண்டனமும்: பெரிய அநீதியாகத் தோன்றும்.

குழந்தைகளிடமும் ஆளுமை' வேற்றுமைகள் உண்டு. அவற்றிற்கேற்ப ஆசிரியர் தண்டனைகளைக் கை யாளும் யுக்தி முறைகள் பல்வேறு அளவுகளில் விளை வினை உண்டாக்கும். ஒர் ஆராய்ச்சியினால் திட்டுதலினால்: புறமுகர்கள்?! அதிக முயற்சியுடன் துலங்கினர் என்றும், அகமுகர்கள்? திட்டுதலினால் முன்னேற்றத்தில் அதிகமாகப் பாதிக்கப் பெற்றனர் என்றும் தெரிகின்றது.

குழந்தை தண்டனையைப்பற்றிக் கொண்டுள்ள கருத் தினையும் ஆசிரியர் மதிப்பிடவேண்டும். தண்டிக்கும் போது ஆசிரியர் மகிழ்ச்சியடைதல் கூடாது. 'தண்டிக்க நேரிடுகின்றதே, வேறுவழி இல்லையே' என்று வருந்துவதாகக் காட்டவேண்டும். இடும். தண்டனையும் தவறுக்கு ஏற்றதாக இருத்தல் வேண்டும். அது செயலின் விளைவு என்று தோன்ற வேண்டும். அதே போன்ற சந்தர்ப்பங்களில் ஒரே விதமாகவும் உறுதியாகவும் இருத்தல் வேண்டும். விலக்குக்கு இடந்தருதல் கூடாது.

(4) தண்டனை, கற்கும் நிகழ்ச்சியினையொட்டி கருதப் பெறுதல் வேண்டும். இது மிகமிக முக்கியமானது. குழந்தை தன் மதிப்பை இழக்க ஒருப்படாது. அறிவுரையே சிலசமயம் போதும்; அல்ல்து ஒரு

24, ssol corph-Reprimand. اسب سببستن

25, 46.5¢, 10-Personality.

26. §ll-Goiá-Reproof.

27. Lisp.gpössf-Extraverts.

28. gos(pāff-Intraverts.