பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

272

கல்வி உளவியல் கோட்பாடுகள்



(2) கால அண்மை[1]  : நேற்று விருந்தில் உண்ட பொருள்கள் நினைவுக்கு வருகின்றன; சென்ற திங்கள் விருந்தில் உண்டவை நினைவுக்கு வருவதில்லை. அண்மையில் நேர்ந்த துலங்கலின் கவடு ஆழ்ந்துள்ளது. அடிக்கடி பழைய பாடங்களைத் திரும்பவும் படிக்கச் செய்தல் பயன் தரும்.

(3) முதன்மை[2] அல்லது புதுமை[3] : முதலில் உண்டாகும் கருத்து மாறாது என்பதை அனைவரும் அறிவர். முதற் சந்திப்பு அல்லது முதற்பார்வை நல்ல பதிவுகளை உண்டாக்கும்; நீண்ட காலம் நீடிக்கவும் செய்யும், அங்ஙனமே புதுப் பொருளும் கவனத்தை ஈர்க்கும்.

(4) தெளிவு[4] : தெளிவு என்பது புலன் உணர்ச்சியின் உறைப்பே. தெளிவு கூரிய கவனத்தை உண்டாக்குகின்றது. கவனம் பெற்றது இருத்தப் பெறுகின்றது. (எ.டு) சூடுண்டபூனை அடுப்பங்கரை ஏறுவதில்லை. தெளிவான படம் மீண்டும் மீண்டும் மனத்தில் எழுகின்றது. தெளிவாக விளக்கம் செய்யும் ஆசிரியர் சொன்னவை இன்னும் நினைவுக்கு வருகின்றன அன்றோ? பொருள் விளக்கத்துடன் கற்கப் பெற்றவை நிலைத்து நிற்கும்.

(5) எண்ணத் தொடர்பு : இதைப்பற்றி மேலே கூறியுள் ளோம்.

(6) மன நிறைவு : ஒரு செயலில் நல்ல தேர்ச்சி பெற்றால் மன நிறைவு அடைகின்றோம். இதனால் மேலும் கற்றல் எளிதாகின்றது. கற்பவை மனத்தில் நன்கு படிகின்றன. இயக்கக் கற்றலில் இவ்வுண்மையை நன்கு அறியலாம்.

(7) மகிழ்ச்சி : மனத்தில் இருத்த இதுவும் ஒரு காரணம் ஆகும். ஒரு பொருள் தோன்றி இன்ப நிலையை எய்துவித்தால் அதனை மட்டும் நினைத்தறிதல் எளிதாகும். (எ.டு) வெற்றிகளை நினைவில் வைத்துக் கொண்டு இடர்களை மறந்து விடுகின்றோம். :வெற்றியைப் போல் வெற்றி தருவது வேறொன்றும் இல்லை."

(8) கவர்ச்சி : கவர்ச்சியுடைய பொருள் மனத்தில் நிலைத்துள்ளது; மற்றவை மறந்து போகின்றன. மாணாக்கர்கள் நூலில் படித்தவற்றை மறக்கின்றனர்; படக்காட்சியில் கண்டவற்றை நினைவில் வைத்துள்ளனர்.


  1. 109. கால அண்மை -Recency.
  2. 110. முதன்மை -Primacy.
  3. 111. புதுமை -Novelty.
  4. 112. தெளிவு -Vividness,