பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடல் கலமும் உடல் கலவியலும் 32?

படுத்துவது; உடலின் நுண்ணிய தொழில்கள் எல்லாவற்றையும் கண்காணிப்பது; உடல் அணுக்களுக்குகந்த உட்சூழ் நிலையை அமைத்துத் தருவது உணவுக் குறைகளை அகற்றுவது; நோயை விரட்டுவது-என்று உணவின் செயல்களைப் பலபடக் கூறலாம். நோய் நீக்கத்தில் உணவு முதன்மை பெற்றுள்ளது. இதுகாறும் மனித அறிவுக்கு எட்டாமலிருந்த சில மூளை நோய்களும் இன்றைய உணவியலறிவின் மூலமாகக் குணமடைகின்றன, தெற்றுவாயருக்குங்கூட உணவின் மூலமாகப் பேசும் ஆற்றல் உண்டாகின்றது. இது வாழ்க்கைக்கு அடிப்படையாக இருப்ப துடன் கொள்கைகள், பழக்க வழக்கங்கள், நாகரிகம், சமூக அமைப்பு, வாழ்க்கைத் தரம் ஆகியவற்றிலும் மாறுபாடுகளை உண்டாக்குகின்றது.

உணவுச் சத்துகள்: உணவின் எந்தெந்தப் பகுதி எந்தெந்தத் தொழில் புரிகின்றது என்று அறிய வேண்டுமாயின், உணவினைச் சோறு, பழம், புலால் என்று கருதாமல் அதனைச் சத்துகளாகக் கருதவேண்டும். கார்போஹைட்ரேட்டுகள்', பிசி தங்கள் , கொழுப்புகள்41, கரிமமிலா உப்புவகைகள்', விட்டமின்கள்’’ நீர் என்பவை உணவுச் சத்துகளாகும். இவை ஒவ்வொனறையும் பற்றிச் சற்று விரிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் இன்றியமையாதது.

கார்போஹைட்ரேட்டுகள்: சருக்கரைப் பொருள்களும் மாப் பொருள்களும் இவற்றுள் அடங்கும். இவற்றின் பெயருக்கேற்ப இவற்றில் கரி, ஹைட்ரொஜென், ஆக்ஸிஜென் ஆகியவை அடங்கியுள்ளன. பின்னிரண்டும் நீரிலுள்ளது போல் 2: 1 என்ற விகிதத்தில் அமைந்துள்ளன. கார்போஹைட்ரேட்டுகள் எரி பொருள் உணவுகள்; அவற்றிலிருந்து தான் வெப்பமும் தசை யாற்றலும் வெளிப்படுகின்றன; அவை நுரையீரலிலுள்ள ஆக்ஸி ஜெனுடன் சேர்ந்து மெதுவாக எரியும்பொழுது இவை வெளிப்படுகின்றன. இவை உடலுக்கு வேண்டிய ஆற்றலில் அரைமுதல் முக்கால் பங்கு வரை தருகின்றன. தானியங்கள், கிழங்குகள், பருப்புகள், கொட்டைகள் ஆகியவற்றில் மாப் பொருளும், பழம், தேன், வெல்லம் முதலியவற்றில் சருக்கரைப்

25. sırri Gurrengpı.Grl-G46ir-Carbo-hydrates. 26. L$3,551&oir-Proteins. + 27. கொழுப்புகள்.Fats. 28. §ffluolòsom p-tiljāsir-Inorganic salts.

29. estLl–uÁIsrassir-Vitamins. 30. śiñ-Carbon.