பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல்பு பிறழ்ந்த நடத்தை

379



தாக்குந்தன்மைத் தூண்டல்கள் மனித குலத்திற்குக் கவலையையும் போராட்டத்தையும் கொடுக்கக் கூடியனவாக உள்ளன. இவற்றை எப்படிச் சமாளிப்பது என்பது எவரும் அறியாத புதிராக உள்ளது. இவற்றால் எவரும் இன்பம் அடைவதுமில்லை; இவையின்றி எவரும் உயிர் வாழவும் முடியாது. ஆனால், தாக்குந்தன்மையைத் தக்க முறையில் மடைமாற்றம் செய்வதால் (எ-டு போட்டிப் பந்தயம், நாடகம் போன்றவை) நிறைந்த சமூக நன்மையைப் பெறலாம்.

ஒத்துழைப்பும் போட்டியும்

இன்றைய நாகரிகம் தனித்தனி மக்கள் போட்டியிட்டு எவ்வாறேனும் உயர்ந்து வருவதனையே பாராட்டி வருகின்றது. பள்ளியிலும் இப்போட்டி நிலையே குடிகொண்டுள்ளது. இந்நிலை மாறவேண்டுமென்பதே அறிஞருடைய விருப்பம் ஐந்து யாண்டிலிருந்து பத்துயாண்டு வயதுள்ள குழவிகளை இரு பிரிவாகப் பிரித்து, ஒரு பிரிவைப் பழையபடி அடக்கி ஆளும் முறைவழியே பயிற்றியும் மற்றொரு பிரிவினை உரிமையும் பொறுப்பும்பெற்று விளங்கும் குடியரசு முறைவழியே பயிற்றியும் சில அறிஞர் ஆய்ந்தனர். குடியரசுக் கல்வி முறையின் பயனாகக் குழவிகளிடையே மனத்திட்பம், ஒழுக்கமுறை முதலியன சிறந்து விளங்கினவாம்; கூட்டுறவும் தோழமையும் நிறைந்து ஒளிர்ந்தனவாம்; பகையும் போராட்டமும் ஒரு சிறிதும் இடம்பெற வில்லையாம். அடக்கியாளும் கல்வி முறையிலோ தாக்கலும் போராட்டமுமே எண் மடங்கு மிக்க விளங்கினவாம்: ஒரு பாவமும் அறியார் மேலும், இந்தப் போராட்டம் பாய்ந்ததாம். போராட்டம் இல்லையானால் உலகில் ஒரு சுவையும் தோன்ற இடமின்றி இந்த முறையிற் பழகிய குழவிகள் இடர் உறுகின்றனவாம்.

தேர்தல் முறையே போட்டி முறையாகும். கல்வி பயிற்றுவதில் போட்டி முறையைக் கையாளுவதால் மெல்லக் கற்கும் குழவிகள் ஊக்கம் இழந்து மனம் குன்றிச் செயலற்று நிற்கின்றன. அல்லது, எப்படியேனும் ஒழியட்டும், என் செய்வது?" என வாளாகிடக்கின்றன. விரைந்து கற்கும் குழவிகள் தமக்கு உரியதல்லாத பெருமையைப் பெறுகின்றன. கல்வி முறைத் தேர்வில் தேர்ச்சி பெறாத குழவி இப்படித்தான் நிற்கும் என உறுதி கூறுவதற்கில்லை. தோல்வி குழவியைப்பற்றிய ஒரு கீழ்மை உணர்வினையும், நிலை இழவினையும் குழவியின் உள்ளத்தே விளைவித்துவிடவும் கூடும். அப்பொழுது, குழவி தனக்குள்தானே சென்று ஒளித்துப் பகற்கனவு கண்டு களிக்கும்