பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒழுக்க வளர்ச்சி

387


நம்மிடம் விருப்பப் பற்றும்12 ஏற்படலாம்; வெறுப்புப் பற்றும்13 உண்டாகலாம். சில எடுத்துக்காட்டுகள் இதனைத் தெளி வாக்கும். நாட்டுப்பற்று என்ற இயல்பூக்கம் பிற நாடுகளை வெறுப்பதனாலும் அமையலாம்; அல்லது தன் சொந்த நாட்டின் மீது கொள்ளும் காதலாலும் ஏற்படலாம். புரட்சி என்ற பற்று குறிக்கோள் நாட்டைக் காணவேண்டும் என்ற அவாவினாலும் அமையலாம்; அல்லது அன்றைய அரசின்மீது கொண்டுள்ள வெறுப்பினாலும் உண்டாகலாம். உண்மை என்ற பற்று உண்மை என்ற பண்பின்மீது உள்ள ஆர்வத்தினாலும் ஏற்படலாம்; அல்லது பொய்மையின்மீதுள்ள வெறுப்பினாலும் உண்டாகலாம். மாணாக்கர்களிடம் உடன்பாட்டுப் பற்றுகள் அமைவதே விரும்பத் தக்கது. சிறந்த ஆளுமை வளர்ச்சிக்கு இவையே அடிப்படையானவை. எதிர்மறைப் பற்றுகள் நெறி கோனிய வாழ்வில் கொண்டுசெலுத்திவிடும்.

பற்றுகள் உண்டாகும் முறை: பற்றுகள் எங்கனம் உண்டா கின்றன என்பதை ஆராய்வோம், ஒரு குழந்தையின் வாழ்க்கை, தொடக்கத்தில் இயல்பூக்கத்தில் மீதுார்ந்து நிற்கின்றது. இது செயற்படுவதில் யாதொரு ஒழுங்கும் இல்லை. குழந்தையின் சூழ்நிலை அதற்குப் புதிய நிலைமைகளைத் தந்து கொண்டே உள்ளது. குழந்தையின் இயல்பூக்கங்கள் அவ்வப்பொழுது எழும் விழைவுகளுக்கும் தேவைகளுக்கும் ஏற்றவாறே செயற்படு கின்றன. நாளடைவில் தனித்தனியாக, தோன்றியபடி யெல்லாம் செயற்பட்ட இயல்பூக்கங்கள் ஒரு கட்டுப்பாட்டினுள் அடங்கி ஒரு குறிப்பிட்ட பொருளைச் சுற்றி இயங்கத் தொடங்கு கின்றன. பட்டறிவு வளர வளர, காட்சிப்பற்று, கருத்துப்பற்று, அறப்பற்று, முதன்மைப்பற்று, தன்-மதிப்புப்பற்று போன்றவை யாகத் துலக்கமுறுகின்றன.

ஒரு குறிப்பிட்ட பொருளைச் சுற்றி ஒரு பற்று வளரத் தொடங்கினால், அப்பொருளைப்பற்றி இயங்கும் அத்தனி யாளின் இயல்பூக்கங்கள் அப்பற்றினால் கட்டுப்படுத்தப்பெறு கின்றன. அப்பொருளுடன் இசைந்துபோகும் இயல்பூக்கங்கள் வலுப்பெறுகின்றன; அப்பொருளுடன் முரண்பட்டு நிற்கும் இயல்பூக்கங்கள் கட்டுப்படுத்தப்பெற்று மட்டுப்படுத்தப்பெறு கின்றன. தொடக்கத்தில் சிறுவன் அன்னையிடம் அளவற்ற அன்பு காட்டுகின்றான்; அவள் உணவூட்டும்பொழுதும் சீராட்டும் பொழுதும் இன்புறுகின்றான். அவளைத் தழுவுகின்றான்; அவளுடன் கொஞ்சுகின்றான்; விளையாடுகின்றான்; இவ்வாறு


12. விருப்பபற்று-'Love' sentiment.
13. வெறுப்புப் பற்று-Lip-Hate' sentiment.