பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒழுக்க வளர்ச்சி

383

பலிக்கின்றன. காலையில் செய்தித் தாள்கள் படிப்பதற்கு வருகின்றன. பலர் அவற்றைப் படிக்கின்றனர். ஒருவர் உள்நாட்டு அரசியல் செய்திகளையும், மற்றொருவர் விளையாட்டுப் பகுதி களையும், பிறிதொருவர் விளம்பரப் பகுதிகளையும், இன்னொருவர் வெளிநாட்டு அரசியல் செய்திகளையும் ஊக்கமாகப் படிப் பதைக் காணலாம். இதனால் அவரவருடைய வாழ்க்கைப் பற்றுகள் இன்னவை என்பதை அறியலாம்.

எனவே, ஒருவருடைய பற்றுகளை அறிந்தால், அவருடைய நடத்தை எப்படியிருக்கும் என்பதை முன்னரே உரைத்து விடலாம். ஆகவே, நாம் அடிக்கடிப் பழகும் மனிதர்களின் பற்று களை அறியவேண்டியது இன்றியமையாததாகின்றது; அவருடைய நடத்தையை உற்று நோக்குதல் மூலந்தான் இவற்றை அறியலாம்.

பற்றுகள் நடத்தையை ஒரளவு ஒருமைப்பாடடையச் செய்யுமாயினும், உள்ளக்கிளர்ச்சிகளைப் போலவே இவையும் நடத்தையைப் பல திக்குகளில் கொண்டு செலுத்தும். இப் பற்றுகளை அடக்கியாள ஒரு தலைமைப்பற்று இன்றியமையாதது. இவற்றைக் கீழே காண்போம்.

சிறுவர்களின் நடத்தையில் பற்றுகள் எங்ஙனம் பங்கு கொள்ளுகின்றன என்பதைச் சற்று ஆராய்வோம். சிறுவன் ஒருவன் தந்தையின் அறிவைக்கண்டு வியக்கின்றான். பிறகு ஆசானது அறிவு அவனுக்கு வியப்பினை விளைவிக்கின்றது. அறிவுள்ள இவர்களிடம் அவனுக்கு அன்பு உண்டாகின்றது. பிறகு தலைமையாசிரியரின் அறிவு, பள்ளியில் பல நிகழ்ச்சிகளில், பங்கு கொள்ளும் பெரியோர்களின் அறிவு அவன் உள்ளத்தைக் கவர்கின்றன. இவர்களிடம் பற்று ஏற்படுகின்றது. நாளடைவில் இப்பற்று அறிவுபற்றிய பற்றாக மாறுகின்றது. அறிவைப். பெறுவதையே முதன்மைப் பற்றாகவும் அவனிடம் அமையலாம்; அஃதே அவனுடைய தன்-மதிப்புப் பற்றாகவும் வடிவு பெறலாம். "அறிவுடையார் எல்லாம் உடையார்" என்ற வள்ளுவப் பெருந் தகையின் வாக்கு இதனை உறுதிப்படுத்தவும் செய்யலாம். சிறந்த அறிவினைப் பெறுவதையே அவன் வாழ்க்கைப் பயனாகக் --குறிக்கோளாகக்-கருதிப் பிறவற்றைத் தாழ்ந்தவையாக எண்ணலாம். அறிவைப்பற்றிய பற்று இவ்வாறு தோன்றும்: அறிவுத் தொடர்புள்ள செய்திகளில் வியப்பு அடைவான்; தன் அறிவை வெளியிடுங்கால் தன்னெடுப்பும், தன்னின் மிக்க அறிவு டையாரைக் காணுங்கால் தன்னொடுக்கமும் அவனிடம் காணப் பெறும். சிறந்த நூல்களைப் படிப்பதிலும், அவற்றைத் திரட்டுவதிலும் அவனிடம் ஆர்வம் தலைகாட்டும். இங்கனம்