பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/435

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

416

கல்வி உளவியல் கோட்பாடுகள்


போரில் அல்லது தேர்தலில் வெற்றி பெறும் ஆசை இவை போன்றவை ஒரு புறம் காட்சியளிக்கின்றன. மற்றொரு புறம் பொதுநலம், சகோதரத்துவம், அஹிம்சை, பஞ்சசீலம், சம தருமம், பணிவு முதலியவை பேசப்பெறுகின்றன. இத்தகைய முரண்பாடுகள் முதிர்ந்தோர் அனைவரையும் பாதிக்கின்றன. ஆசிரியர் முதிர்ந்தோருள் ஒருவர் அல்லவா? மேற்கூறியவாறு உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசும் சமூகச் சூழ்நிலையில் ஆசிரியருக்குப் பொருத்தப்பாடும் மனநலமும் எங்ங்ணம் அமைதல் கூடும்?

மேலும், வாழ்க்கை நிலையை உயர்த்த வேண்டும் என்றும், அடிப்படைத் தேவைகள் எல்லோருக்கும் கிடைக்கச் செய்தல் வேண்டும் என்றும் பொது மேடைகளிலும், செய்தித்தாள் களிலும், நூல்களிலும் முழங்கப் பெறுகின்றன. ஆனால், உண்மை வாழ்க்கையில் இத்துறைகளில் ஏமாற்றங்களே காணப் பெறுகின்றன. அதிலும், ஆசிரியர்கள் விஷயத்தில் திரும்பின பக்கமெல்லாம் ஏமாற்றங்கள்; இடர்ப்பாடுகள். நாம் ஒன்றை எதிர்பார்க்கின்றோம்; அது நிறைவேறுவதில்லை; வேறொன்று நிகழ்ந்து விடுகின்றது; நிறைவேறுகின்றது. இத்தகைய ஏமாற்றமுள்ள சூழ்நிலையில் மனநலம் அமைவதற்குச் சாத்தியமுண்டா?

எங்கும் விடுதலை, விடுதலை’ என்று பறைசாற்றப் பெறு கின்றது. ஆனால், உண்மையில் அடிமை மனப்பான்மையே வளமாக வளர்கின்றது; கொடுமையான நிர்ப்பந்தங்களே எம்மருங்கும் தாண்டவமாடுகின்றன. அதிலும், ஆசிரியர்கள் விஷயத்தில் அனைத்திற்கும் பூட்டுகள் போடப்பெறுகின்றன. ஒன்றையும் அவர்கள் தாமாகச் செய்ய முடியாது. அனைத் திலும் பிறர் தலையீடு நுழைந்து விடுகின்றது. இவ்வுலகில் நமக்கு விருப்பமுள்ளவைகளைப் படிக்க முடிகிறதில்லை; நாம் விரும்பும் தொழிலும் நம்க்குக் கிடைப்பதில்லை. நம் விருப்பப் அடிக் குழந்தைகட்குக் கற்பிக்கவும் முடிகின்றதில்லை. இதில் எத்தனையோ குறுக்கீடுகள், தடைகள் நிகழ்ந்து விடுகின்றன; இந்நிலையில் விடுதலை எங்குள்ளது?

கொள்கை முறையில் சமூக சமத்துவம் வேண்டுமென் கிறோம்; பெருந்தலைவர்கள் இதைப்பற்றி முழங்கிய வண்ண முள்ளனர். நடைமுறையில் இன்னும் பலர் பல துறைகளில்சமூகம், பொருளாதாரம், கல்வி போன்றவற்றில்-தாழ்த்தப் பட்டவர்களாகவே காட்சியளிக்கின்றனர்.