பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மனிதனும் சூழ்நிலையும்

37


மற்றொரு நரப்பத்தினை நோக்கிச் செல்லுகின்றது. நரப்ப ஆற்றல் ஒரேபாதையில் செல்லும், திரும்பாது. நரப்ப ஆற்றலை. நரப்பக்கிளைகள் பெற்று அதனை நரப்ப விழுது வேறு நரப்பத்திற்குச் செலுத்துகின்றது. நரம்பிலேற்படும் உள் துடிப்பு கூடல் வாயை மிகச் சிக்கலான கிட்டத்தட்ட திடீரென்று ஏற்படும் வேதியியல் செய்கையால் பாலம்போல் பிணைக் கின்றது என்றும், இந்தச் செய்கை நடப்பதற்குக் குறிப்பிட்ட ஒரு சில உயர்ந்த நுரைப்புளியங்கள் [1]துணை செய்கின்றன என்றும் கருதுவர்.

நரப்பத்தூண்டல்: ஒவ்வொரு நரப்பமும் தூண்டப்பெற்று மற்றொன்றைத் துரண்டுகின்றது. தரப்பத்தின் செயல் இதுவே. நரப்பமானது ஒளி, ஒவி முதலிய வெளிப் பொருள்களால் தூண்டப் பெறலாம். இவைதாம் புகுவாய்கள். புகுவாய் நரப்பங்கள் அடுத்த நரப்பங்களைத் தூண்ட, இவ்வாறு தொடர்ந்து செல்லுகின்றது. முடிவில் இத் தூண்டல் தசையில் அல்லது சுரப்பியில் முடிகின்றது. இவைதாம் இயங்குவாய்கள். இவற்றின் கிளர்ச்சியே புகுவாய் வழியாக வந்த தாக்கலின் முடிவாகும். தசைகள் சுருங்குவதாலோ, சுரப்பிகள் சாறுகளைச் சுரப்பதனாலோ உடல் முழுவதும் வெளிப்பொருள் வழியாகத் தாக்கிய இயற்கைப் பரப்புடன் பொருத்த முறுகின்றது.

நரம்புக் கிளர்ச்சி: ஒவ்வொரு நரம்பு நாரிலும் ஒடும் நரம்புக் கிளர்ச்சி ஒரு தன்மையினதே என்று ஆய்வாளர்கள் அறுதியிட்டுள்ளனர். இதைச் சிறிது விளக்குவோம். மின்னாற்றல் பல கம்பிகள் வழியாக ஒடுகின்றது. ஒரு கம்பியில் ஒடுவதற்கும் மற்றொரு கம்பியில் ஒடுவதற்கும் வேற்றுமை இல்லை. ஒரு கம்பியில் ஒடுவதோ விளக்கெரிக்கின்றது; மற்றொன்றில் ஒடுவதோ விசிறுகின்றது. இவ்வேற்றுமை கம்பியின் இயற்கை வேற்றுமையன்று, ஒவ்வொரு கம்பியும் எங்கெங்கே போய் முடிகின்றதோ அந்தந்த முடிவிடத்தைப் பொறுத்ததாகும் இவ்வேற்றுமை, விளக்கில் போய் முடிவது விளக்கெரிக்கின்றது; விசிறியில் போய் முடிவது விசிறுகின்றது. அதுபோல நரம்புக் கிளர்ச்சிகளும் தம்மில் ஒரு வேற்றுமையின்றி முடிவிடத்தால் வேற்றுமையுறுகின்றன. கண்ணில் போய் முடிவது ஒளியை உணர்கின்றது; காதில் போய் முடிவது ஒலியை உண்ர்கின்றது. நரம்புகள் செயற்படுவதால் உயிர்ப் பொருள் எரிந்து கரியமிலவாயுவையும் வெப்பத்தையும் வெளிவிடுகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்னனர்.


  1. நுரைப்புளியங்கள்-Enzymes