பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

கல்வி உளவியல் கோட்பாடுகள்


மூளையைப் பெயர்த்து எடுத்துவிட்ட போதிலும் அவை சில செயல்களைச் செய்கின்றன. ஒரு தவளையின் மூளையை ஒர் ஆய்வாளர் அறுத்தெடுக்கின்றார். பின் அதனுடலின் தோலில் சிறிதளவு ஓர் அமிலத்தைத் தெளிக்கின்றார். அப்போதும் அந்தத் தவளை தனது பின்னங்காலைத் தாக்கி அந்த அமிலத்தை அகற்ற முயல்கின்றது. ஆய்வாளர் அக்காலைப் பிடித்துக்கொள்கின்றார். தவளை மற்றொரு காலைத் தூக்கி அச்செயலை நிறைவேற்ற முயல்கின்றது. அங்ங்ணமே அவர் ஒரு நாயின் மூளையை அகற்றுகின்றார். பின்னர் அதன் முதுகில் ஒரு கட்டை எறும்பைக் கடிக்கவிடுகின்றார். கடிபட்ட இடத்தருகே தன் காலைத் தூக்கித் தேய்த்துக் கொள்கிறது அந்நாய். மேற்கூறியவாறு மடக்குச் செயல் நடைபெறுவதைச் சிறிது விளக்குவோம். வெளிப் பொருள் துரண்டுகின்றது; இக்கிளர்ச்சி புகுவாய் வழியாகப் புகுந்து புலனுணர் நரம்பு வழியாக முதுகு நடுநரம்பினை அடைகின்றது. பின்னர், இயக்க நரம்புகளின் வழியாக இயங்குவாய்களை அடை கின்றது; அஃதாவது தசை யினை அடைகின்றது. தசையின் இயக்கத்தால் கால் ஆடு கின்றது; கால் அமிலத்தை அகற்ற முயலுகின்றது. எறும்பு கடித்த இடத்தைச் சொரிய முயலுகின்றது. நரம்பின் இயற்கையமைப்பே இத்துணைக்கும் காரணமாக உள்ளது. தாமாகச் செயலுறும் தொடர்ச்சிகள் பல இம் முதுகு நடுநரம்பில் காணக் கிடக்கின்றன. அயர்ந்து துரங்கும்போதும் மயக்கத்தால் நம்மை மறந்து கிடக்கும்போதும் இத்தகைய மடக்குச் செயல்களைச் செய்து முடிக்கின்றோம் அல்லவா?

மடக்குச் செயல்களை இயற்றுவதைத் தவிர, முதுகு நடு நரம்பு மூளையிலிருந்துவரும் செய்திகளைக் கழுத்திற்குக் கீழுள்ள பகுதிகளுக்கும், இப்பகுதிகளிலுள்ள உணர்ச்சிகளை மூளைக்கும்