பக்கம்:கல்வி நிலை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$96 கல்வி கி 2ல

--- - - # * * ஆணும் காதும் உணர்வின் கருவிகளாய் ஒளிபுரிந்து மிளிர்கின் றன. அவற்றின் செயல் இயல்கள் வியனிலைகளையுடையன.

பேச்சும் மூச்சும் உயிர் வாழ்வின் காட்சிகளாயுள் ளன. உடலில் உயிர் இருப்பதை மூச்சு காட்டுகிறது. அது அறிவும் ஆற்றலும் உடையது என்பதைப் பேச்சு உணர்த்து கின்றது. ஒருவன் பேசும் பேச்சிலிருந்து அவனுடைய அறிவு நிலை வெளியே தெளிவாய்க் காட்சிக்கு வருகின்றது.

வாய் உள்ள பிள்ளை பிழைக்கும்" என்பது பழமொழி.

வாய்மொழிக்கும் உயிர் வாழ்வுக்கும் உள்ள உறவுரி மையை இது தெளிவாக விளக்கியுள்ளது. வாய்ப்பேச்சால் மனித இனம் இனிது இயங்கி வருதலால் மொழி வழக்கு. ஒளி விளக்கு என உலகம் வழங்க நேர்ந்தது. சுவை ஒளி ஊறு ஒசை காற்றம் என்னும் ஐந்து வகையுள்ளே அகிலமும் தொகையாய் அடங்கி யுள்ளன. இந்த ஐந்தனுள்ளும் ஒசை ஆகாயத்தின் கூருய் அமைந்திருத்தலால் அது தலைமையான கிலேமையில் கிலவி உலகம் நலமுற உணர்வு அருளியுள்ளது.

ஒசை ஒலி எல்லாம் ஆய்ை நீயே என்று இறைவனே கோக்கி அப்பர் இப்படித் துதித்திருக்கிருர். ஒசையானது. ஒலி அளவில் இங்கிய பொழுது இசை என நின்றது; அது பொருளோடு பொருந்திய பொழுது மொழி என வந்தது.

இந்த மொழிகளை வழங்கி வருவதஞலேயே மாந்தர் விழுமிய நிலையில் விளங்கி வந்துள்ளனர். மனித இனம் பல் வேறு இடங்களில் பிரிந்திருந்து பலவகை நிலைகளில் வாழ்ந்து வருகலால் அந்த அந்த நாடுகளுக்குத் தக்கபடி ம்ொழிகள் அமைய ன்ேந்தன. தேசங்கள் தோறும் பாஷைகள் வேற" என்பது பழமொழியாய் வந்துள்ளது. பாஷை, படிப்பு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/102&oldid=552028" இலிருந்து மீள்விக்கப்பட்டது