பக்கம்:கல்வி நிலை.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. கவிஞன் 97

பாட்டு என்னும் சொற்கள் பேசுதல் என்னும் வினைக் குறிப்பால் விளைந்து வந்து விளைவுகளை விளக்கி யுள்ளன.

மனித வாழ்க்கைக்கு இனிய உயிரா தாரமாயிருப்பது மொழி. அக்க மொழி ஒளியும் உயர்வும் பெற்றிருப்பது அகில் விளைந்துள்ள நூல்களாலேயாம். நூல்களுக்குச் சீவா காாமாய் அமைந்திருப்பன கவிகள்; கவிகளுக்கு விளை புல மாயுள்ளவர் கவிஞர்களே. ஆகவே கவிஞர் இலரேல் நால் கள் உளவாகா; நால்கள் இலவேல் மொழி ஒளி இழந்த விழிபோல் பொலி விழந்தபோம்; அது பழுதாய்ப் பாழ் படின் மனித வாழ்வு முழுதும் பாழாம். இவ்வுண்மையை இங்கே கன்கு ஊன்றி உணர்ந்து கொள்ள வேண்டும்.

இங்கனம் மக்கள் வாழ்க்கைக்கு உயிராதாரமாயுள்ள மொழியை வளம் படுத்தி உணர்வு நலங்களை உதவி எவ்வழி யும் விழுமிய நிலையில் அருள்புரிந்து வருகிற தெருளுடைய

ராய்க் கவிஞர் ஒளிமிகுந்து உயர்வடைந்து ஒங்கியுள்ளனர்.

மேகம் மழை பொழிகிறது; சூரியன் ஒளிபுரிகிருன்; பூமி விளை பொருள்களை அருளுகிறது; நதி நீர்களை வழங்கி வருகிறது; அவ்வாறே கவிஞரும் அறிவு நலன்களை உரிமை யோடு மனித சமுதாயத்துக்கு இனிது உதவி வருகின்றனர்.

வானும் கதிரும் மதியும் நதியும்நேர்

மானும் கவிஞர் மதி.

என்ற கல்ை அவரது நிலைமையும் நீர்மையும் அறியலா கும். உயிர்க்கு உறுதி II (Tājг உணர்வு கலங்களையும் விகி நிய * ங்களையும் கவிஞர் படைத்தருளுதலால் சிறந்த சிருடடி கருக்காாய் இவர் விளங்கி நிற்கின்றனர். பிாம.கிருட்டியை விடக் கவி சிருட்டி சிறந்த மகிமையுடையது; அவனுடைய

13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/103&oldid=552029" இலிருந்து மீள்விக்கப்பட்டது