பக்கம்:கல்வி நிலை.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. கவிஞ ன் 101

மனித சமுதாயம் நெறிமுறையோடு இனிது இயங்கி வருப்படி சட்டங்களை நிரூபணம் செய்தருளுகிறவர்கள் எனக் கவிஞரைக் குறித்து மேல்நாட்டறிஞர் பலரும். இவ். வாறு கருதி யிருத்தலால் இவரது தலைமையும் நிலைமையும் அறியலாகும். மகிநலம் வளர மகிமைகள் வளர்ந்து வந்தன.

கவிஞன் ஒருமுறை உரைத்த விதி என்றும் குன்ருமல் எக்காலத்தும் கின்று நிலவி வருகின்றது. கான் தனியே இருந்து எண்ணிய எண்ணங்கள் உலகம் முழுவதும் பரவி ஒளிபுரிந்துவர இவன் அருள்புரிந்து வருகின்ருன்; இவனது: உதவி நிலைகள் அதிசய வியப்பாய்த் துதி கொண்டுள்ளன. மனித உலகம் மகிகலம் உடையதாய் இனிது இயங்கி வருவது கலையின் காட்சியாலேயர்ம்; அந்தக் காட்சி கவிஞ. ரிடமிருந்து மாட்சியாய் வந்துள்ளது. கிவ்விய கலை ஞானங் களோடு தெய்வத் திருவருளும் தோய்க்கிருத்தலால் இவரு டைய வாய் மொழிகள் உயிரினங்களுக்கு உய்வைத் தந்து வருகின்றன. மனித இனம் புனித வாழ்வு வாழ்ந்து தனி நிலையில் உயர்ந்து செல்ல வேண்டும் என்றே கவிஞர் உணர் -வு கலங்களை யாண்டும் உதவி அருள் புரிந்து வருகின்றனர்

உலகநீதி, அரசகிே, தெய்வதிே யாவும் கவிஞருடைய உரைகளில் சுவைகள் சுரந்து உவகை ஒளிகளை விசியுள்ளன. தேவ தேவர்களும் இன்ன நிலையில் ஒழுகி வரவேண்டும்: அங்கிலை தவறினுல் அவரும் இழிவுற கேர்வ்ர் என இவர் துணிந்து மொழிந்து விடுகின்றனர். இவருடைய உள்ளக் துணிவும், உணர்வு கலங்களும், உரைகளின் கிறங்களும் அதிசய நிலையில் துதிகொண்டு திகழ்கின்றன. பொருள் பொதிந்த மொழிகளை அருள் பொதிந்து அன்புரிமையோடு இன்புறத் தருகின்றனர்.அருள்மொழிதெருள் ஒளிவீசியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/107&oldid=552033" இலிருந்து மீள்விக்கப்பட்டது