பக்கம்:கல்வி நிலை.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 கல்வி கி 2ல

உருளும் நேமியும் ஒண்கவர் எஃகமும்

மருளில் வாணியும் வல்லவர் முவர்க்கும்

தெருளும் நல்லறமும் மனச் செம்மையும்

அருளும் நித்தபின் ஆவதுண் டாகுமோ?

(இராமா, மந்தரை11)

தருமம், நேர்மை, கருணை ஆகிய இந்த மூன்று நீர்மை களையும் அரசர் உரிமையாக மருவியிருக்க வேண்டும்; இல்லை. யேல் அவருடைய ஆட்சி நன்கு செல்லாது. மனச் செம்மை மனிதனுக்கு எல்லா நன்மைகளையும் இனிது அருளும்; அதனை மன்னன் இன்னுயிராகப் பேணிக் கொள்ள வேண் டும்; அதனல் அரிய மேன்மைகள் யாவும் உளவாம் என் பது கெரிய அதனை நடுவே வைத்து நயமாக உரைத்தார்.

திருமால் எனினும், சிவபெருமானே ஆன அலும், பிரமனே என்ருலும் தரும நீதியைத் தழுவிவரும் அளவே" பெருமை; வழுவின் இழிவாம்; தேவ தேவர்கட்கே அவ்: வாறு ஆயின் மனிதன் தவறினுல் அவன் நிலை என்னும்: இதனை உன்னி உணர்ந்து அரசன் யாண்டும் அறநெறியாள குய் ஒழுகி வர வேண்டும் என உலகம் ஆளவரும் அரசருக் குக் கம்பர் இவ்வாஅ கரும நீதியைப் போதித்திருக்கிரு.ர். வழிமுறைகளை வகுத்து மொழிவிளக்கு ஏற்றி வையம் உய்ய இவர் ஒளி புரிந்து வருவது உவகை சுரந்து வருகிறது.

வையகம் முழுவதும் வறிஞன் ஒம்பும்ஒர் செய்எனக் காத்து இனிது அரசு செய்கின்றன்.

(இராமா, அரசியல் 12). தசரதன் அரசு புரிந்த முறையை இது காட்டியுள்ளது.

ஒரு ஏழைக் குடியானவன்; ஒரு காணி கிலம் மாத்திரம் அவனுக்கு இருந்தது; அதனை உழுது பண்படுக்கிப் பருவம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/108&oldid=552034" இலிருந்து மீள்விக்கப்பட்டது