பக்கம்:கல்வி நிலை.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 கல்வி கி2ல

உணர்வு கலம் உயர்ந்தபோது அந்த மன்னன் மகிமையாய் விளங்கி உலகிற்கு உயிராய் ஒளி புரிந்து அருளுகின்ருன். வையம் இன்பு:றின் மன்னன் இன்புறும்; வெய்யது ஒன்றுறின் தானும் வெய்துறும். (சூளாமணி). பயாபதி என்னும் அரசன் காட்டைப் பாதுகாத்து வங்க நிலையைத் தோலா மொழித் தேவர் இப்படிக் காட்டி யிருக்கிருர். உண்மையான அரசர் எப்படி இருக்கவேண் டும் என்பதை இது ஈண்டு நுட்பமாக உணர்த்தி யுள்ளது.

உலக நிலைகளையும் மனித சமுதாயத்தின் வாழ்க்கை முறைகளையும் துணுகி நோக்கி உறுதி உண்மைகளைக் கவி ஞர் தெளிவாக உணர்த்தி யருளுகின்ருர். இயற்கை நிலைகள் அவருடைய மொழிகளில் வெளி வரும் பொழுது உவப்பை யும் வியப்பையும் விளைத்து வருகின்றன. கூரிய மானச நோக்கு உடையவர் ஆதலால் சீரிய உண்மைகளை நேரே கண்டு உலகம் காண உரைத்துவிடுகின்ருர். உலக பாலரான மன்னர்க்குப் பலவகையான அறிவு கலங்களை உரிமையோடு

உரைத்து உறுதி நிலைகளைப் போதித்து வருகின்ருர்.

வான்நோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோல்நோக்கி வாழும் குடி. (குறள், 542)

உல்கத்திலுள்ள உயிரினங்கள் மழையால் வாழ்ந்து வரு. கின்றன; ஒருங்ாட்டிலுள்ள குடிசனங்கள் அந்தக்கேசத்தை

ஆளுகின்ற அரசனுடைய நீதியான ஆட்சி முறையால்

மாட்சின்மயாய் வாழ்ந்து வருகின்றனர்; ஆகவே தனது நிலை ம்ைன்யயும் தலைமையையும் உண்ர்ந்து அரசன் நெறிவழுவா

மல் கின்று தரும நீதிய்ேர்டு குடிகளைப் பாதுகாத்து வச

-

வேண்டும் என்று தேவர் இப்படிப் போதித் திருக்கின்ருர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/110&oldid=552036" இலிருந்து மீள்விக்கப்பட்டது