பக்கம்:கல்வி நிலை.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. கவிஞ ன் 107

-னினும் அதில் விளைவதை முறைசெயது ஊட்டின் யானே பல மாதங்கள் வரை நிறைவா யுண்ணும்; நாறு வேலியே ஆலுைம் யானை அதனுள் புகுந்தால் கால்களில் மி.கிபட்டுக் கதிர்கள் பாழாம்; நிலமும் கெடும்; அதற்கு உணவும் இலை யாம்; இக்க நிலைமையை அரசர் கருத வேண்டும்; அறிவு டைய வேந்தன் நெறியோடு வரிகளை வாங்கி வரின் சிறிய காடாயிருந்தாலும் கோடிக் கணக்கான பொருள் பெருகி வரும்: அவன் பேராசையால் முறைகெட்டுக் குடிகளிடம் பொருளை விரும்பிக் கொடுமை புரியின் நாடு கெடும்; வரு வாய் ஒழியும்; அரசு அழியும்; தருமநெறி தழுவாமல் ஆர வாரமாய் விண்பெருமை கொண்டு திரியும் வெறியரோடு கூடாமல் கல்ல அறிவாளிகளையே உரிமைத் துணையாக உவக் அதழுவி அரசன் முறைசெய்து வாழவேண்டும்; அவ்வாறு வாழ்ந்துவரின் எவ்வழியும் அரசு சிறந்து விளங்கும்; யாண் டும் புகழ்கள் பொங்கி வரும்; இந்த உண்மையை உணர்ந்து கொள்க’ என இவ்வாறு இவர் அரசனுக்குப் போதித் திருப்பதை இதில் கூர்ந்து ஒர்ந்து கொள்ளுகிருேம்.

புலவர்களுடைய நிலைமையும் நீர்மையும் தலைமையும்

முன்பு எவ்வளவு சீர்மையுடையனவாய் இக்காட்டில் சிறந்து இருந்துள்ளன. எத்தகையமுறையில்வாழ்ந்துவந்துள்ளனர். என்பதை இவர் சரிதம் நன்கு வரைந்து காட்டியுள்ளது.

அருந்திறலாண் மையோடு உலகை ஆண்டுவந்த அரச ரும் கவிஞர் சொல்லுக்குக் கலை வணங்கி யிருக்கின்றனர். எல்வழியும் உறுதி கலங்களைச் செவவையாக உரைத்து வரு தலால் வையம் இவரை வாழ்த்தி வரலாயது. உலக நிலையில் தலைமை அதிபதிகளாய் நிலவியிருந்த சக்கரவர்த்திகளினும்

இவள் மிக்க மேன்மையுடையாய் விளங்கி நின்றனர். தாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/113&oldid=552039" இலிருந்து மீள்விக்கப்பட்டது