பக்கம்:கல்வி நிலை.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 கல்வி கி 2ல

எதையும்,துருவியறிந்து எவ்வழியும்செவ்வி மிகுந்து திவ்விய கதியில் உயர்ந்து சீர்மையோடு சிறந்து விளங்கி வருகிறது.

Poet's eye doth glance from heaven to earth, from * - earth to heaven. . [Shakespeare)

கவிஞனது கண் வானுலகத்தையும் வையகத்தையும். ஒருங்கே நோக்கி உண்மையை விரைந்து உணர்ந்து கொள் கிறது” என ஆங்கிலக் கவிஞராகிய ஷேக்ஸ்பீயர் இங்ங்னம். உரைத்திருக்கிரு.ர். கவி நோக்கு ரவி நோக்கா யுள்ளது.

உயிரினங்கள் நெறிமுறையே ஒழுகி உலகம் கல்ல நிலை. வில் இயங்கி வரவேண்டும் என்றே கவிஞர் உண்மைகளை யாண்டும் உரிமையோடு நன்கு சொல்லி யருளு கின்ருர்.

சோழ மன்னன் மகன் நல்ல அழகன்; உதய குமரன் என்னும் பேரினன்; அவன் மணிமேகலையை மருவி மகிழ. விழைந்து உருகி அலைந்தான். அவனே நோக்கி ஒரு பெண் -தெய்வம் புத்தி போதித்ததாகச் சாத்தனுர் என்னும் கவிஞர் - கூறியிருப்பது இங்கே கூர்ந்து ஒர்ந்துகொள்ள வருகின்றது. 'கோன்நிலை திரிந்திடின், கோள்நிலை திரியும்; - கோள்நிலை திரிந்திடின், மாரிவறம் கூரும்; மாரி வறங்கூரின் மன்னுயிர் இல்லை; மன்னுயிர் எல்லாம் மண் ஆள் வேந்தன் தன்னுயிர் என்னும் தகுதி இன் ருகும்; தவத் திறம் பூண்டோள் தன்மேல் வைத்த அவத் திறம் ஒழிக.” (மணிமேகலை, 7)

அரசன் நீதியின்றி நெறிதிறம்பினுல் இவ்வுலகில்மழை பெய்யாது; மழை இல்லை யானுல் உயிர்கள் தயாாய் அழி யும்; அவ்வாறு அழியின் அரசன் பழிபாவங்களை அடைந்து பாழ்படுவான் என அக் குமரனுக்கு இது உணர்த்தியுளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/124&oldid=552050" இலிருந்து மீள்விக்கப்பட்டது