பக்கம்:கல்வி நிலை.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 கல்வி கி 2ல

கிக் குடிசனங்கள் செழித்து வாழும்படி அரசன் இழைத்து வரும் அளவே அவனுடைய கோலும் குடையும் தழைத்து வரும் என ஒருமுறை இவர் உரைத்தருளினர். மன்னனை. . கோக்கி அன்று இவர் சொன்ன அறிவுரை அரிய பல பொருள்கள் பொதிந்தது; பெரிய சுவைகள நிறைந்தது;

கவி யுருவில் வந்தது; அதன் ஒரு பகுதி அயலே வருகிறது.

மல்லல் முதுார் வய வேந்தே! செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும் ஞாலம் காவலர் தோள்வலி முருக்கி ஒரு நீ ஆகல் வேண்டினும் சிறந்த -5 நல்லிசை நிறுத்தல் வேண்டினும் மற்றதன்

தகுதி கேளினி மிகுதி யாள! நீரின்று அமையா யாக்கைக் கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே; உண்டி முதற்றே உணவின் பிண்டம்; 10 உணவுஎனப் படுவது நிலத்தொடு நிரே நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு உடம்பும் உயிரும் படைத்திசி குேரே; வித்தி வான்நோக்கும் புன்புலம் கண்ணகன் வைப்பிற்று ஆயினும் நண்ணி ஆளும் #5 இறைவன் தாட்கு உதவாதே; அதனுல்

அடும்போர்ச் செழிய! இகழாது வல்லே நிலன் நெளி மருங்கின் நீர்நிலை பெருகத் தட்டோர் அம்ம இவண் தட்டோரே தள்ளாதோர் இவண் தள்ளா தோரே. (புலவியனுர்).

இந்தப் பாட்டை ஊன்றிப் படியுங்கள்; பொருளை அமைதியாக் கவனியுங்கள்; ஈண்டிய கேள்வியுடைய பாண் டிய மன்னனையும், அவனுக்கு வேண்டிய நீதியை வேண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/126&oldid=552052" இலிருந்து மீள்விக்கப்பட்டது