பக்கம்:கல்வி நிலை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. நூ ல் 39

தொளி அளித்துத் தத்துவ கலங்களை அருளி வருதலால்

அால்கள் புத்தகங்கள் என வித்தக நாமங்களோடு வந்தன.

  • =

புத் தி நலம் அருளிப் புத்துயிர் தந்துவரும்

புத்தகமே புத்தக மாம். -

என்ற தல்ை எத்தகைய நிலைகளையுடையது புத்தகம் என்பதை உய்த்து உணர்ந்து கொள்ளலாம். மனிதனுடைய அகத்தைப் புனிதமாக்கிப் புதுப்பித்துவருவதேபுத்தகமாம். அல்லாத மற்றவை யெல்லாம் வெறும் செத்தைகளே.

உயர்ந்த கருத்துக்கள் நிறைந்த நால்கள் உயிரினங்களை உயர்த்தி வருகின்றன; பெரிய அறிவின் சாரங்கள் அரிய

  • ம போகங்களாய் இனிது அமைந்து நிற்கின்றன.

என்றும் அழியாத இன்ப நிலையங்களாயுள்ள இனிய கால்களை நன்கு பேணி நாடி உணர்பவர் நலம் பல பெறு ன்ெருர். பேணுதவர் பேதைகளா யிழிகின்ருர். அருந்தல் பொருந்தல்கள் ஆன தேக போகங்களையே பலர் ஆவலோடு யாண்டும் விரும்புகின்றனர்; அறிவு நூல்களை யாதும் விரும் பாமல் வெறியராய் விலகி நிற்கின்றனர். அந்த அவல நிலை ஒழிய வேண்டும் என்று மேலோர் கவலை பூண்டுள்ளனர்

பால்வேண்டும் பழம்வேண்டும் பணம்வேண்டும்

பதம்வேண்டும் பதவிக் கெல்லாம் மேல்வேண்டும் நிலைவேண்டும் வேணவெல்லாம்

வேண்டும்என விளிவே வேண்டி மால்வேண்டும் பெரியர்பலர் மதிவேண்டும்

எனவேண்டி மாண்பு மிக்க நூல்வேண்டும் எனவேண்டும் நோக்கிலராய்

நோக்கிழந்தார் நோக்கம் என்னே?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/45&oldid=551971" இலிருந்து மீள்விக்கப்பட்டது