பக்கம்:கல்வெட்டில் தேவார மூவர்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேராசிரியர் கா. ம. வேங்கடராமையா

8


திருநாவுக்கரசர்‌ தேவாரத்‌ திரட்டு, சுந்தரர்‌ தேவாரத்திரட்டு, சிவனருள்‌ திரட்டு, நீத்தார்‌ விண்ணப்பம்‌, நால்வர்‌ வழிபாடும்‌ திருமுறைப்‌ பாடல்களும்‌, திருவருட்பாத்திரட்டு ஆகிய நூல்கள்‌ இவ்வகையுள்‌ அடங்கும்‌.

இந்நூல்களில்‌ தமிழிலும்‌ ஆங்கிலத்திலும்‌ அருளாளர்களின்‌ வரலாறுகளை எழுதியுள்ளார்‌. பக்திப்‌ பனுவல்களைக்‌ கொடுத்து அவற்றுக்கெதிர்‌ பக்கங்களில்‌ அவற்றின்‌ ஒலிபெயர்ப்பையும்‌ தந்துள்ளார்‌.

இந்த நூல்கள்‌ நெட்டால்‌ தமிழ்‌ வைதிக சபையின்‌ வெளியீடுகளாக வந்தன.

தமிழ்‌ பேசத்தெரியும்‌; ஆனால்‌ படிக்கத்‌ தெரியாது என்ற நிலையில்‌ உள்ளவர்களுக்கு எளிய முறையில்‌ தமிழ்‌ என்ற ஒரு நூல்‌ செய்தார்‌.

திருக்குறள்‌ பணிகள்‌

திருக்குறள்‌ உரைக்கொத்து என முப்பாலுக்கும்‌ கிடைத்த பழைய உரைகளின்‌ தொகுப்பு வெளியிட்டார்‌. ஐவரின்‌ ஆங்கில மொழிபெயர்ப்புகளில்‌ தக்கவற்றைத்‌ தெரிவு செய்து திருக்குறளை ஒட்டி வெளியிட்டார்‌. திருக்குறள்‌ உரையாசிரியர்களின்‌ வரலாற்றாய்வும்‌ செய்து வெளியிட்டார்‌. இவை மூலப்பிரதிகளை ஒப்பிட்டு வந்த பதிப்புகள்‌ ஆகும்‌. 1972க்குப்‌ பிறகு ஸ்ரீகாசி மடத்தாரால்‌ வெளியிட்ட பதிப்புகளில்‌ மொழிபெயர்ப்பு உள்ளிட்ட சில சிறப்புகள்‌ நீக்கப்பட்டுள்ளன.

திருக்குறள்‌ அறத்துப்பாலுக்குச்‌ சற்றொப்பக்‌ குறளளவுக்கே உள்ள சிற்றுரை எழுதி வெளியிட்டார்‌.

திருக்குறள்‌ சைனர்‌ உரைப்பதிப்பு தஞ்சை சரஸ்வதி மகால்‌ வாயிலாக வெளிவந்தது. அதன்‌ பதிப்பாசிரியராகிய இப்பெருமகனார்‌ மூலச்சுவடிகளை ஒப்பிட்டு அரிய திருத்தங்கள்‌ செய்து விரிவான ஆராய்ச்சி முன்னுரையும்‌ எழுதிப்‌ பதிப்பித்தார்‌.

மராட்டியர்‌ வரலாறு

தஞ்சைத்‌ தமிழ்ப்‌ பல்கலைக்‌ கழகம்‌ தொடங்கியதும்‌ அதன்‌ முதல்‌ துணைவேந்தராகத்‌ திருமலி. முதுமுனைவர்‌ வ.அய்‌. சுப்பிரமணியன்‌