பக்கம்:கல்வெட்டில் தேவார மூவர்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வெட்டில் தேவார மூவர் 19

சம்பந்தர் மனைவி

மூன்றாம் இராசராசனின் 2ஆவது ஆண்டுக்குரிய ஆச்சாள்புரக் கல்வெட்டில் ஞானசம்பந்தர் திருமணம் செய்து கொண்ட அம்மையாரின் பெயர் காணப்பெறுகிறது.

'இந் நாயனார் கோயில் ஆளுடைய பிள்ளையாரும் சொக்கியாரும் காவேரிக்குத் தெற்கே வடக்கூர்களில் திரு வெண்காட்டிலும் திருநனிப்பள்ளியிலும் திருவாக்கூரினும் எழுந்தருளிப் பின்பு பெரும்பற்றப்புலியூரிலே எழுந்தருளுகிற இடத்து' என்பது சாசனம். இதனால் ஞானசம்பந்தர் பெருமான் கைப்பற்றிய அம்மையார் பெயர் சொக்கியார் என அறிய வரும்'.

விக்கிரம சோழனது (திருநல்லூர்ப் பெருமனத்து) ஆறாமாட்சியாண்டுக் கல்லெழுத்தில்,

இக்கோயில் உடைய பிள்ளையார் திருக்கல்யாணம் பண்ணின திருமாளிகையும் திருவீதியும் திருநந்தவனமும் திருமடைவிளாகமும் நிலம் ஆறுமாவும்' என்பது காணப் பெறுகிறது’.

பிரம்மபுரீசர்

இரண்டாம் குலோத்துங்க சோழனுடைய திருவாரூர் வடமொழிக் கல்வெட்டில் திருஞானசம்பந்தர் பிரமபுரீசர் எனப் பெற்றார்".

"பூரீமத் பிரம்ஹபுரீச வாகாதிபதி: ஸ்வஸ்வாமிமித்ர" என்ற பகுதியில் தேவார மூவரும் குறிக்கப் பெறுவர். பிரமபுரி என்பது சீகாழியைக் குறிக்கும். பிரமபுரீச்சர் என்பது காழியர்கோவான ஞானசம்பந்தரைக் குறிக்கும்.

பூரீகாழி நாடுடைய பிள்ளை ஞானசம்பந்தர் திருக்கேதிச்சுரத் திருப்பதிகத்தில் 'காழிநாடுளார்க் கிறைஞானசம்பந்தன்' எனக் குறித்துக் கொள்கிறாா. "கன்னிநாடுடையான் கோயில் காழிநாடுடைய பிள்ளை'

'ாபது சேக்கிழார் வாக்கு.