பக்கம்:கல்வெட்டில் தேவார மூவர்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 பேராசிரியர் கா. ம. வேங்கடராமையா

எம்பிரான் சம்பந்தன்

திருத்தொண்டத் தொகையில் சம்பந்தர்,

'வம்பறா வரி வண்டு மணம் நாற மலரும்

எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்”

எனச் சுந்தரரால் பாராட்டப் படுவர். இதிற் கண்ட “எம்பிரான் சம்பந்தன்' என்ற தொடர் திருமழுவாடியின் (திருமழபாடி) மகேஸ்வரர்களில் ஒருவர் பெயராக அமைந்துள்ளது அறிந்து மகிழ்தற்குரியது."

திருஞானசம்பந்த நல்லுரர்

திருஞானசம்பந்தர் பெயரால் சில ஊர்கள் இருந்தன. நாவல்பாக்கமான திருஞான சம்பந்தநல்லூரைத் திருவோத்துர் ராஜநாராயணச் சம்புவராயர் கல்வெட்டுக்களும்." தவசிகுழியான சம்பந்த நல்லூரைக் காளையார் கோவிலில் உள்ள சடையவர்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டுக்கள்

இரண்டும் குறிப்பிடுகின்றன.”

திருஞானசம்பந்த சதுர்வேதி மங்கலம் என்பது திரிபுவனச் சக்கரவர்த்திகள் இராசராசனின் 22ஆம் ஆண்டுக்குரிய மன்னார்குடிக் கைலாசநாதர் கல்வெட்டு ஒன்றுள் கண்டது.” போகிஸ்வரமுடையார் கோயில் திருஞான சம்பந்தன் தளத்தில் இருந்தது என்பது சடையவர்மன் விக்கிரபாண்டியனின் நான்காம் ஆண்டுக்குரிய தேவிப்பட்டணக் கல்வெட்டு’ ஒன்றால் அறியப்பெறும்.

திருஞானசம்பந்தன் நாழி

திருவலிதாயத்தில் உள்ள சோழ அரசன் ஒருவனின் பதினாறாம் ஆண்டுக் கல்வெட்டில், “திருஞானசம்பந்தன் நாழி என்னும் பெயருடைய அளவைக் கலன் குறிக்கப்

பெறுகிறது."