பக்கம்:கல்வெட்டில் தேவார மூவர்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 பேராசிரியர்கா. ம. வேங்கடராமையா

மேற்படி கல்வெட்டில் சுந்தரர் ஆளுடைய நம்பி என்றும், சம்பந்தர் ஆளுடைய பிள்ளை என்றும் கூறப்பெற்றதினின்று திருநாவுக்கரசர் ஆளுடைய அரசு என்று கூறப்பெற்றிருத்தல் கூடும் என்று ஊகித்து அறியலாம்.

தாராசுரத்து இராசராசேச்சுரத்து இறையகப் புறச் சுவரில் கண்ட சிற்பக் கீழ் கல்லெழுத்துக்களில் 'திருநாவுக்கரசாண்டார் கதை என்று எழுதப்பட்டுள்ளது. இறைவன் திருவடி சூட்டும் நிலையில் அச்சிற்பம் அமைந்துள்ளது. திருப்பனந்தாள் செஞ்சடையப்பர் கோயிலில் உள்ள திருத்தொண்டத் தொகைச் சிற்பங்களில் திருநாவுக்கரசர் உழவாரப் படையுடன் இருத்தல் கவனத்திற்குரியது.

திருவீழிமிழலையில் திருநாவுக்கரசு தேவர் திருமடம் என்று ஒரு மடம் இருந்ததாக ஒரு கல்லெழுத்து நுவல்கிறது. அதில் திருமடத்திற்குரிய நிலங்களின் பெயர் கூறப்பெற்றுள்ளது. இன்னொரு சாசனம் மகேசுவரருக்கு உணவளித்தற் பொருட்டு மேற்படி திருமடத்திற்கு நிலமளித்த செய்தியைக் கூறுகிறது. பல ஊர்களிலும் திருநாவுக்கரசர் திருமடங்கள் இருந்தன.

சொற்றுணை

திருநாவுக்கரசர் கல்லிற் பிணிக்கப் பெற்றுக் கடலிற் பாய்ச்சப்பெற்ற பொழுது பாடப்பெற்றது 'சொற்றுணை வேதியன் என்ற (நமசிவாய) திருப்பதிகம் ஆகும். “மதுரையும் ஈழமும் கொண்ட கோப்பரகேசரி பன்மற்குயாண்டு 41ஆவது. திருவாமாத்துருடைய மகாதேவற்கு.தேவன் சொற்றுணை அகமுடையான் செட்டங்கை வைத்த திருநொந்தா விளக்கு" என்ற திருவாமத்துர்க் கல்வெட்டிலும், ' 'விக்கிரமசோழ தேவற்கு யாண்டு மூன்றாவது வாகூருடையான் சொற்றுணை கங்கை சடைக் கரந்தானிடை நாங்கள் கொண்ட காசாவது' என்ற திருச்செந்துறைக் கல்வெட்டிலும் சொற்றுணை என்பது மக்கட் பெயராய் அமைந்திருத்தலைக் காணலாம்.