பக்கம்:கல்வெட்டில் தேவார மூவர்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வெட்டில் தேவார மூவர் 37

திருப்பாதிரிப் புலியூர்க் கோயிலில் இருந்த சிவப்பிராஹ்மணன் ஒருவன் பெயர், தோன்றாத்துணை பட்டன்' என்பது அறிய வருகிறது. இதனால் தோன்றாத்துணை என்பது மக்கட் பெயராயமைந்ததும் அறியலாயிற்று.

தேனாருங் கொன்றையன்

மூன்றாம் இராசராச சோழனது பதினாறாவதின் எதிராமாண்டுக் கல்வெட்டொன்று, திருவானைக்காவில் உள்ளது. இக்கல்வெட்டில் கையெழுத்திட்டவருள் ஒருவர் தேநாரும் கொன்றையன் என்ற பெயருடையவர் ஆவர். இப்பெயர் திருநாவுக்கரசர் திருவானைக்காவில் அருளிய திருத்தாண்டகத்தில் காணப்படுகிறது:

ஊனாகி உயிராகி அதனுள் நின்ற

உணர்வாகும் பிறவனைத்தும் நீயாய்நின்றாய் நானேதும் அறியாமே என்னுள் வந்து

நல்லனவும் தீயனவும் காட்டா நின்றாய் தேனாருங் கொன்றையனே நின்றி யூராய்

திருவானைக் காவிலுறை சிவனே ஞானம் ஆனாயுன் பொற்பாதம் அடையப் பெற்றால்

அல்லகண்டம் கொண்டடியேன் என்செய்கேனே.

தருணேந்து சேகரன்

'சங்கரன் காண் சக்கரம்மாற் கருள்செய் தோன்காண்

தருணேந்து சேகரன்காண் தலைவன் தாள்கான'

என்பது திருவாரூர்த் திருத்தாண்டகப் பகுதி. இளம்பிறை சூடிய இறைவனைத் தருணேந்து சேகரன் என அப்பர் கூறிய இத்தொடர் மக்கட் பெயராக அமைந்துள்ளது. திருக்கழுக் குன்றத்தில் உள்ள சடையவர்மன் எம்மண்டலமும் கொண்டருளிய சுந்தர பாண்டியனின் ஒன்பதாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில் திருக்கழுக்குன்றமுடைய