பக்கம்:கல்வெட்டில் தேவார மூவர்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 பேராசிரியர் கா. ம. வேங்கடராமையா

சிதம்பரத்திலும் திருத்தொண்டத் தொகையான் திருமடம் இருந்தமை கூறப்பெற்றுள்ளது. குலசேகர பாண்டியனது 13ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டொன்றிலிருந்து திருத்தொண்டத் தொகையான் திருமடம் ஒன்று திருப்புத்தூரில் இருந்ததாகத் தெரிகிறது’.

சிதம்பரம் நடராசப் பெருமான் திருக்கோயிலின் வடக்குக் கோபுரத்தை அடுத்துத் திருத்தொண்டத் தொகை ஈச்வரம் என்றொரு திருக்கோயிலில் தொகை அடியார்கள் சிவலிங்கத் திருமேனி வாயிலாக வழிபடப் பெற்றனர் என அறிகிறோம். இவ்வாலயம் நவலிங்கம் கோயில் என இந்நாளில் வழங்குகிறது.

இக்கோயிலில் சுந்தரமூர்த்திசுவாமி” களின் திருவுருவமும் அமைக்கப்பெற்றிருந்தது எனக் கல்வெட்டுக்கள் புகல்கின்றன. மூன்றாம் குலோத்துங்க சோழனது இரண்டாம் ஆட்சியாண்டுக்குரிய கல்வெட்டு இத்திருக் கோயிலைக் குறிக்கிறது’.

சிதம்பரத்தில் உள்ள இராசேந்திர சோழனது 24ஆம் ஆட்சியாண்டுக்கல்லெழுத்தொன்று தில்லையில், "தி ருமாசித் திருநாளில் திருத்தொண்டத் தொகை விண்ணப்பஞ் செய்வார்க்குக் காசு ஜஞ்சு" நிவந்தம் அளித்ததாகப் பகர்கிறது.

பொன்னார் மேனியன் "'

சுந்தரர் திருமழபாடியில் பாடியருளிய திருப்பதிகம், 'பொன்னார்மேனியன் என்னும் தொடக்க முடையது. பொன்னார் மேனியன் என்னும் தொடர் 11ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு சேனாபதியின் மனத்தைக் கவர்ந்தது. அவர் "சேனாபதி அரையன் கடக்கங் கொண்ட சோழன் அணிமுரி நாடாழ்வான்' எனப் பெற்றார். அவர் திருமழபாடிக் கோயிலில் செம்பு தராவால் பொன்னார் மேனியன் என்னும் திருமேனியை எழுந்தருள்வித்து, அதற்கு நாள் வழிபாட்டிற்கு நிபந்தம் அளித்ததோடு சில அணிகலன்களையும் அளித்ததாக இரண்டாம் இராசேந்திரனுடைய கல்லெழுத்து உரைக்கிறது."