பக்கம்:கல்வெட்டில் தேவார மூவர்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வெட்டில் தேவார மூவர் 77

சித்தலிங்க மடத்தில் கோப்பெருஞ்சிங்கன் காலத்தில் அறிந்தவன் பல்லவராயன் என்பவன் கைக்கோளப் பெரும் படையினரால் எழுந்தருள்விக்கப் பெற்ற ஆளுடைய பிள்ளையார்க்கு நிவந்தம் தந்தான். 2000 காசுகளை முதற் பொருளாக்கி வட்டியால் வழிபாட்டுத் தேவைகளை நிறைவு செய்து கொள்ள ஏற்பாடு செய்தான் (418 of 1909).

திருப்புத்துரில் திரிபுவனச் சக்கரவர்த்தி விக்கிரம பாண்டியனின் பன்னிரண்டாவது ஆட்சியாண்டில் கைலாசமுடைய நாயனார் ரீ கோயிலில் திருநாவுக்கரசு தேவர் படிவத்தைத் தேவரடியாள் ஒருத்தி எழுந்தருளுவித்தாள் நில நிவந்தம் தந்தாள். (117 of 1918).

கோயில் தேவராயன் பேட்டையில் மூன்றாம் இராசேந்திரனின் ஐந்தாமாண்டில் பிள்ளை செழியக் கோனார் தீட்டின்படி திருநாவுக்கரசரின் பிரதிமம் எழுந்தருளுவிக்கக் கோயில் நிலம் விற்கப்பெற்றது. பெற்ற 4000 காசுகளால் பிரதிமம் எழுந்தருள்விக்கப்பெற்றது. (278 of 1923)

திருக்கச்சூரில் மூன்றாம் குலே ாத்துங்க சோழன் காலத்தில் திருநாவுக்கரசர் எழுந்தருள்விக்கப் பெற்றார். எழுந்தருள்விக்கப் பெற்ற ஆண்டு அறியக் கூடவில்லை (316 of 1909)

திரிபுவனச் சக்கரவர்த்திகள் வீரராசேந்திரன் என அமைந்த மூன்றாம் குலோத்துங்கனின் பதினான்காம் ஆண்டுக்குரிய அகஸ்திய கொண்டா கல்வெட்டு, உத்தம சோழ கங்கனாயின செல்வகங்கனின் தேவி திருநாவுக்கரசரை எழுந்தருள்வித்து விழாக்களுக்குக் கொடை தந்ததனைக் கூறுகிறது. (559 of 1909).

திருவலஞ்சுழியில் காணியாளர் எழுந்தருளுவித்த திருநாவுக்கரசு தேவர், திருவாதவூரடிகள், திருக்கண்ணப்ப தேவர் பிரதிமங்களுக்கு, இரண்டாம் இராசராசனின் பன்னிரண்டாம் ஆண்டில், திருமடைவிளாகத்தில் இருக்கும் ஆட்கொண்டான் தேவும் திருவும் உடையாள், கிழக்கடைய நின்றாள். என்னும் இருதளிப்பெண்டிர் நிவந்தம் தந்தனர்.