பக்கம்:கல்வெட்டில் தேவார மூவர்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வெட்டில் தேவார மூவர் 79

7. குகைகள் திருமடங்கள்

1. குகைகள்

திருஞானசம்பந்தன் குகை

திருப்புதூர் வட்டம் சதுர்வேதி மங்கலம் என்ற ஊரில் மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் திருஞானசம்பந்தன் குகை என்று ஒரு குகை இருந்தது. உருத்திர கோடீஸ்வரமுடைய நாயனார் திருமடை விளாகத்தில் இது இருந்தது.

இக்குகையில் ஆண்டார்களுக்கு அன்னம் பாலிக்கப் பொன்னமராவதியைச் சே ர்ந்த திருக்கொடுங் குன்றம் உடையான் கேரளராசன் ஆன வீரமழகிய நிஷதராசன் என்பார் நிலமளித்தார்.

இச்செய்திகளை மூன்றாம் குலோத்துங்க சோழனின் 21 ஆம் ஆட்சியாண்டுக் கல்லெழுத்துரைக்கிறது (311 of 1928).

கும்பகோணம் வட்டம் முன்னியூரிலும் திருவகத் தீச்வரமுடையார் கோயில் தெற்கில் திருமடை விளாகத்தில் திருஞானசம்பந்தன் குகை இருந்தது. புத்துாரான திரிபுவனமாதேவி சதுர்வேதி மங்கலத்துப் பெருங்குடி மஹாசபையார். இக்குகைக்குப் பூண்டியுடையான் உதையஞ் செய்தான் அளித்த நிலத்தை ஊர்க் கீழ் இறையிலியாக்கிய செய்தி மூன்றாம் இராசராசனது 22ஆம் (கி. பி. 1200) ஆட்சியாண்டுக் கல்லெழுத்து அறிவிக்கின்றது (609 of 1902).

திருநாவுக்கரசு குகை

திருக்குறுக்கையில் உள்ள மூன்றாம் குலோத்துங்க சோழனுடைய 29ஆம் ஆட்சியாண்டு (கி. பி. 1201க்குரிய)