பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Göfす。 字。 grfす。 9& வேலை செய்யறது. சும்மா யிருக்க முடியுமா? உட்காந்து சாப்பிட்டா எத்ணி நாளைக்கு? நான் ஒரு நோயாளி. ஆடம்பர வாழ்க்கை.' 'நான் பாடற பாட்டை நீங்கள் பாடினால் எப்படி?’ "நோ, அது ஒரு கொள்கை கூட. நேரமாயிட்டுது. நான் கீழே போறேன். தேங்க்யூ சொல்ல மாட்டேன் உங் களுக்கு. நேத்திலிருந்து நீங்கள் எனக்கு சகோதரன் மாதிரி- அவர் முதுகில் அறைந்தான், சற்று சுளிரென்று தான். அவனுக்கு அவன் மேலேயே கோபம் என்னவோ? இப்படித் தன்னையே காட்டிக் கொடுத்துக் கொள்ளும்படி ஆயிட்டுதே என்ற்ோ? நீங்கள் என்னை விட்டுட்டுப் போவக்கூடாது. காது கேக்குதா?” பதிலுக்குக் காத்திராமலே கீழே யிறங்கிப் போய்விட். டான். அவன் அப்பிக் கொண்டிருந்த பெளடர் வாசனை அவரைச் சூழ்ந்து தயங்கிற்று. சேட்டுக்குக் குளியல் அலெர்ஜி. இப்படி உடம்பு இருந்தால் என்ன செய்வது? அன்று மாலை டாக்டர் வந்திருந்தார். 'ஸாரி, மன்க்சந்த்ஜி, நேத்து செங்கல்பட்டில் ஒரு டெலிவரி கேஸ். ரொம்ப தெரிஞ்சவங்க, உங்கள் மாதிரி. முஸ்லிம். என் மாதிரி கொஞ்சம் இசை கேடு.” தர்மராஜன் டியையும் பிஸ்கட்டையும கொண்டு வந்து எதிரே வைத்தார். தேங்க்ஸ். புது சமையல்காரரா? சமையல்காரன்னு அழைக்காதீங்க. என் சகோதரன் மாதிரி, அவர் மிஸ்டர் தரம்ஜி-' "என்ன சேட்ஜி, உங்கள் ஜாதியில்லே. எனக்குத் தெரிஞ்சு இதுக்கு முன்னால் உங்களோடு சேர்ந்து இவரைப் பார்த்ததில்லே. ஆனால் உங்கள் உடன்பிறப்பு: 'நேற்று அவர் இல்லாட்டி நான் மர்கயா-'