பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

கல் சிரிக்கிறது

கெனவே என்னை வைத்யன் உப்பைக் குறைக்கணும் என்கிறான்!”

மணி அங்கு விட்டு அகன்றதும் அவர் அங்கேயே உட்கார்ந்திருந்தார். நேரம் போனதே தெரியவில்லை.


2


ன் அறையை அடைந்தபோது தெரு விளக்குகள் அனைத்தும் அணைந்தாகி விட்டன. மரங்களின் மேல், மொட்டை மாடிகளிலிருந்து ஒட்டுக் கூரைகளின் மேல், ஒன்றிரண்டு ஒலைக் குடிசைகளின் மேல் பெளர்ணமி பால் ஒழுகிற்று. வானத்தில் பொதி பொதியாக வெண் பஞ்சு.

தேடிப் பிடித்த இடம்தான். தேடினாலும் இதுபோல் கிடைக்கனுமே! அதிர்ஷ்டம்தான். தெருவிலிருந்து நேரே மாடிக்குத் தனிவாசல்-வாடகை சற்று சூடுதான். ஆனால் அது தந்த சுயேச்சைக்குத் தகுதிதான். கீழே குடித்தனக்காரர்களின் தயவு வேண்டாம். கதவைத் திறக்க, மூட தனக்கும் தாக்ஷண்யமில்லை. எப்போ வேணுமானாலும் போகலாம். வரலாம். ஆனால் தான் இரவுவேட்டையாடும். பறவையல்ல என்று நினைத்துக் கொண்டபோது உதடுகள் தாமே லேசாய் முறுவலித்தன. என் தனிமை, நான் காக்கும் என் கற்பு.

மெர்குரி விளக்கைப் போட்டதும் அறை வெண்ணியத்தில் மலர்ந்தது. சின்ன அறைதான். ஜன்னல் ஒரம் கயிற்றுக் கட்டிலில் இறுகச் சுருட்டிய படுக்கை (ஜமுக்காளம்,போர்வை, ஒரு தலையணை), அறையின் ஒரு மூலையில் மூடிபோட்ட மண் கூஜா, அதன் மேல் கவிழ்த்த கண்ணாடி தம்ளர். இன்னொரு மூலையில் முக்காலிமேல்