பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

கல் சிரிக்கிறது


"ஆமாம்! அவள் அப்படி விரும்பினால்...” என்று அவளைப் பார்த்து முனகினார்.

“நீங்கள் தயவு வைத்தால், நாங்கள் பல வருஷங்களுக்குப் பின் இப்பத்தான் அகஸ்மாத்தாய்ச் சந்திக்கிறோம்.”

முன்னால் அவர், பின்னால் அவள் தன் பையைத் தோளில் மாட்டிக் கொண்டு 'பேங்கின்' ஹாலை விட்டு வேகமாக வெளியேறுகையில், ஒரு சிலர் அவர்களை வியப்புடன் நோக்கினர். சில பார்வை ஏளனம். இத்தனை கவனத்துக்கு ஆளாவதே ரொம்பவும் கூச்சமாயிருந்தது. ஆனால் என்ன செய்ய முடிகிறது?

இருவரும் பேசக்கூட இல்லை. எங்கே போகிறோம் என்று கூடத் தெரியாமல் நடந்து கொண்டிருந்தனர்.

ஒரு குளிர்சாதன ஒட்டல் தென்பட்டது.

“காபி சாப்பிடுவோமா, லார்?”

“ஆஹா!”

குடும்பம், ஒரு தடுப்பு அறைக்குள் நுழைந்து அமர்ந்தனர். வேறு யாருமில்லை. அவர்கள் இருவர் மட்டும்தான்.

ஸர்வர் இருவர் எதிரிலும் வைத்துவிட்டுச் சென்ற காபியிலிருந்து ஆவி நறுமணத்துடன் கிளம்பிற்று.

“கோமதி, செளக்யமா யிருக்கயா?”

புன்முறுவலுடன் தலையை ஆட்டினாள்.

“கோமதி! உன்னைப் பார்த்துப் பத்து வருடங்கள் ஆகியிருக்குமா?"

“ஏன், மேலேயே ஆகியிருக்கும். நீங்கள் பாங்கை விட்டுப்போய் இரண்டு வருஷங்களுக்கு அப்புறம் எனக்குக்-