பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ரா.

45


மை காட்! இது குழம்பா, தேவாமிர்தமா?” குழந்தை போல் அவருக்கு உள்ளே பொங்கிற்று.

இந்தக் குழந்தை சந்தோஷத்தைப் பார்க்க என்ன வேணுமானாலும் செய்யலாம்.'

உங்கள் கையாலேயே ஒரு கரண்டி விடுங்களேன். இன்னிக்கு ஒரு வெட்டு வெட்டப் போறேன்!" அவருக்குத் தொண்டைலேசாய்க் கம்மிற்று, குசத்தி டோண்ட் கேர்.’’ -

  • குசத்தியோ குறத்தியோ, என்ன வேனுமானாலும் சொல்லிக்கோங்கோ, ரோசப்பட்டால் இந்தச் சம்ை.: கிடைக்குமா? அதுவும் இந்தக் குழம்பு, இந்தக் கறி சா, அவருக்கு இப்பவே தனியா எடுத்து வெச்சிட்னும் இல்லாட்டி அவர் பங்குக்கு நான் பொறுப்பில்லே. நீங்கள் என்ன வெறுமென கொறிச்சுண்டிருக்கேள்?'

"ஒரு வயசுக்குப் பின் அவ்வளவுதான். நீ இப்படி குழம்பையே தாண்டாமலிருந்தால் ரஸ்த்துக்கு எப்போ வரது? நான் ரஸ்த்தில் ஒரு ஸ்பெஷலிஸ்ட்.” 始 அப்போ குழம்பில் ஸ்பெஷலிஸ்ட் இல்லையாக்கும்: இல்லாமலே இப்படியாக்கும்! இருந்தால் என்ன ஆயிடுமோ? நான் சொர்க்கத்துக்குப் போயிடுவேனா?: 'இப்போ எங்கிருந்து பேசறே?” 'முதலில் இந்தக் கலர்-ஸ்ார்! எனக்குச் சொல்லித் கொடுங்களேன்!” அவர் சிரித்துக் கொண்டே கை விரித்தார். இதில் சொல்லிக் கொடுக்க என்ன இருக்கு? கண் பார்த்தால் கை செய்ய வேண்டியதுதானே. ஒரு நாள் ஒன்று ஏறும், ஒன்று தாழும். பண்ணப் பண்ணச் சரியாயிடும், அப்புறம் என்னைத் துரக்கி அடிச்சுடுவே!"