பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

கல் சிரிக்கிறது

பெருமூச்செறிந்தாள். "அதெல்லாம் முடியாது. அதிலும் அம்சம்னு ஒண்ணு இருக்கு. நீங்கள் சொல்லிக் கொடுத்தாலும் எனக்கு நேரம் எங்கேயிருக்கு? போவ்-ஏப்பங்கூட வந்துட்டுது. மானம் போச்சு!” அவளுக்குக் கண் துளும்பிற்று. "இது மாதிரி நான் எப்பவுமே சாப்பிட்டதில்லே. இவ்வளவு நன்னா, இவ்வளவு சந்தோஷமா, இவ்வளவு அன்பா எனக்குப் போட்ட தில்லை.”

"ஏன், ரஸம் உனக்குப் பிடிக்கலியா?"

"யார் சொன்னது? கச்சட்டியில் கிணத்தடிக்குப் போயிடுத்தே! ஆனால் அதைத் தனியாப் பண்ணி, தனியாச் சாப்பிட்டு ரக்கணும். ரெண்டையும் சேர்த்துப் புகழ எனக்கு யோக்கியதையில்லை. இன்னிக்கு நான் குழம்புப் பாட்டி. விட்டுச் சொல்றேனே, வயிற்றில் இனி இடமில்லை. ஆனால் நாக்கில் இன்னும் குழம்பு ருசி துளித்து நிக்கறது. இன்னும் தணிஞ்ச பாடில்லை. இது மாதிரி ஒரு நிலை உண்டா? என்ன சொல்வேன்?"

தீராத ருசியே ஒரு தண்டனைதான்.

"நீ இவ்வளவு தூரம் அனுபவிச்சுச் சாப்பிடுவேன்னா, இன்னும் இரண்டு நாள் இங்கேயே தங்கி என் கை வரிசையைக் காண்பிக்கலாம்னு சொல்லு-" கண் சிமிட்டினார்.

"இரண்டு நாள் என்ன? வீட்டுக்குப் பெரியவாளா நீங்கள் நிரந்தரமா எங்களோடேயே இருந்துட்டால் எங்களுக்குப் பூரண சம்மதம்தான். சமைச்சுப்போடறதுக்காக அல்ல; போட்டதற்காக அல்ல; வீட்டுக்குக் காவலா யிருப்பேள் என்பதற்காக அல்ல; எங்கள் குழந்தைக்குத் தோழனாக இருப்பேள் என்பதற்காக அல்ல; உங்களை உங்களுக்காகவே-இல்லை, எங்களுக்காகவே-போங்கோ சார். எனக்குச் சொல்லத் தெரியல்லே. என்.வீட்டுக்காரர்