பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

கல் சிரிக்கிறது


'சேட்கிட்ட மாட்டிண்டாச்சா? நீ மீளப் போறேங்கற எண்ணம் உனக்கு இன்னும் இருக்கா?” கையை விரித்தாள். "யார் கண்டது? நான்தான் சொன்னேனே, நம்பிக்கைக்குப் பூட்டுக் கிடையாது. என்னிக்காவது நமக்கு நல்ல காலம் வந்து அவர் மனம் திருந்தி விடிவு காண மாட்டோமான்னு ஆசைதான். நிறைவேறத்தான் போறதோ, இல்லை, அந்த எண்ணத்

  • : *

தோடயே மடிஞ்சுதான் போயிடுவேனோ? "சரி, யார் இந்த சேட்?” 'யாரோ மனக்சந்த் ஸ்ர்க்காராம்-’ 'மனக்சந்த்? மனக்-சந்த். கேட்ட பேராயிருக்கே. அதுவும் சமீபத்தில், ஆ, பெல்ஸ் ரோடா?” "ஆமாம் ஸார், உங்களுக்குத் தெரியுமா?’’ 'தெரியாது, தெரிஞ்சுக்கணும்- எழுந்திருந்தார். "சரி கோமதி, போய்வரேன்.” “இத்தனை நாழிக்கு மேலேயா? என்ன லார், பைத்தியம் பிடிச்சிருக்கா? இங்கேயே படுத்துண்டுட்டு காலையில் சாப்பிட்டு விட்டுப் போகலாம்-’ 'இல்லே குழந்தே, நான் வரேன். ' 'ஏன்? ஏன்? ஏன்?’’ 'உன் ஆத்துக்காரர் கூட இல்லை. இருந்திருந்து நான் இன்னிக்குத்தான் வந்து ராத் தங்கணுமா? எனக்கே நன்னா யில்லை.” 'சரியாப் போச்சு. நீங்கள்தான் இப்போ பயப் படறேள். அவர் அப்படிப்பட்ட ஆசாமியில்லே.” 'கோமதி உன்னை நான் ஒண்ணு கேக்கப்போறேன். உன் மனளை நீ நன்னா சோதிச்சுப் பதில் சொல்லணும். உண்மையில் உனக்கு விடிவு இருக்குன் னு நீ நம்பறயா?”