பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ரா.

59


'நான் தப்பாப் பேசியிருந்தால் சாமி மன்னிச்சுக் கணும்.' ஒன்று புரிந்தது. இவர்கள் விட மாட்டார்கள். பல்லை விளக்கிவிட்டுத் திரும்பிவந்தபோது இருவரு மில்லை. மேசை மீது தட்டும், மடலும் மூடியிருந்த துணி யைத் திறந்ததும்-நேற்றுக் குழித்தட்டில் சேவை-ஒரு கிண்ணத்தில் பால், ஒரு குழியில் தேங்காய்ப் பொடி மற்றும் ஒன்றில் விழுது நெய். - வேண்டாம் என்று விரைத்தாலும், தின்னும்போது வேண்டித்தானிருக்கு. தின்னத் தின்னப் பசிக்கவும் பசிக் கிறது. ஹோட்டலில் இது கிடைக்குமா? கிடைத்தாலும் இவ்வளவு அயனாய்க் கிடைக்குமா? - நாடார் வரும் சத்தம் கேட்கிறது. நாடார் மட்டும். வெள்ளிச் சொம்பு, வெற்றிலைத் தட்டுடன். காப்பி என் கிற திருஷ்டியை அனுபவிச்சாகணும். (மடக்-மடக்) அனுபவிச்சாச்சு, வெதவெதன்னு சூடுகூட இல்லை. எப்படித்தான் இதை இவர்கள் ருசிச்சுக் குடிக்கிறாளோ? 'சாமி தாம்பூலம் போடுமா?’’ அவசியம் போட வேண்டியதுதான் . குமட்டல் அடங்க. 'நாடார், இனி எனக்கு வேணும்னா நானே உங் களைக் கேட்பேன். நீங்கள் சிரமப்படாதீங்க. எனக்கு சங்கோஜம் கிடையாது.” - 'இது எப்படிச் சிரமம் ஆகும்? இது என் சந்தோஷம், என் பாக்கியம்.” - 'நாடார்! நீங்கள் எல்லாரிடத்திலும் இப்படித்தான் பேசுவீங்களா, இல்லை, இந்த ஐஸ் எனக்கு மட்டுமா?" நாடார் கன்னத்தில் போட்டுக் கொண்டார். 'சாமிக்குத் தெரிஞ்சு என்ன இருக்க முடியும்?"