பக்கம்:கள்வர் தலைவன்.pdf/51

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


காட்சி-4) கள்வர் தலைவன் 4? இப்பொழுது உதவியாயிருக்கும் காலசேனன் முதலிய சிற்றரசர்களுடனேயே அவன் போர் புரிவான் : அப் பொழுது சித்ராயுதனுடைய பாசறை நமது கள்வர் களால் கொள்ளே யடிக்கப்படும். இதற்குள் கோஸ்கி எடுத்துச்சென்ற கிருபத்தின்படி உமது மாமா அவர் கள் உமக்குத் துணையாகத் தமது சைனியத்தை அழைத் துக் கொண்டு குமாரபுரத்துக்கு வந்து சேர்வார். நாமும் நம்முடைய மற்றக்கள்வர்களே யெல்லாம் அழைத்துக் கொண்டு அவரைச் சந்திப்போமாகில், பிறகு நடக்க வேண்டிய விஷயங்களைப்பற்றி அப்புறம் யோசிப்போம்; இப்பொழுது நாம் கால தாமதஞ் செய்யலாக்ாது, புறப் படுவோம் சீக்கிரம் வாருங்கள். - ஏ. அப்பா, என் மாமாவை உனக்கெப்படித் தெரியும் சித் ராயுதன் இருக்குமிடம் முதலிய விஷயங்களேயெல்லாம் நீ எப்படி அறிந்தாய் ! அப்பா ! இப்பொழுதாவது கூறமாட்டாயா நீ யாரென்று ? - - ஜெ. ஐயனே! எனக்கு வாக்களித்ததை மறந்தீரோ ? ஒரு காலம் வரும் அப்பொழுது எல்லாம் உமக்குக் கூறுகின் றேன் : இப்பொழுது சீக்கிரம் புறப்படும் வகையைப் பாரும். (எல்லோரும் போகிருர்கள்.) காட்சி முடிகிறது. நான்காவது காட்சி. இடம்:-புஷ்பபுரியில் சிறைச்சாலை செளமாலினி தன் சிறுகுழந்தையைக் கையில் வைத்துக்கொண்டு ஒரு புறமாக உட்கார்ந்த ருக்கிருள். பாலசூரியன் மற்ருெருபுரம் சித்திரைசெய்கிருன். நடுவில் திரையிட்டிருக்கிறது. செள.கண்ணே பாலகா 1 இது ·裔 முன்ஜன்மத்திற். செய்த பாவத்தின் பயனே ? அல்லது என்வயிறுசெய்த கொடுமையோ? அரண்மனையில் நீ சகலசுகத்துடன் பிறப்பதைவிட்டு இக்கொடிய சிறைச்சாலையில் பிறக்கும் படி நேரிட்டதே! மன்னர் மன்னனுக்குப் புதல்வனுய்ப் பிறந்தும் இக்கதியிலிருக்கும்படி நேரிட்டதே! உன்தலை விதி அது! சுசங்கதா தேவியாகிய உன் கல் அத்தை நீ அருந்த பால் கொண்டுவருமளவும் கண்வளராய் ! கண்ணே கண்வளராய் ! (குழந்தையைத் தாலாட்டுகின்ருள்.) கண்ணே! அந்தமட்டும்.காங்கள்படுத்துயரமொன்றையும் அறியாதிருக்கின்ருயே! உனக்கு அரண்மனையிலிருப்பதும் இந்த ப்யங்கரமான சிறைச்சாலையிலிருப்பதும் எல்லாம்