பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு

நீங்கள் எப்படியிருந்தால் எனக்கென்ன ? எல்லோரும் என் பிள்ளைகள்.” அவர் கண்களும் பனித்தனவோ ? தொண்டையைக் கனைத்துக் கொண்டு அவசரமாகச் சுண்ணாம்பைத் தடவிப், பாக்கும் வெற்றிலையுமாகச் சுருட்டி, வாயில் திணித்துக் கொண்டார்.

இம்மாதிரித் தருணங்கள் தாம், வாழ்க்கை வாழ்வதற் கென்றே என உறுதிப்படுத்துகின்றன. ‘சரி அம்பி, கிளம்புவோமா ?”


ஹோலியின் சாயக் குழம்பில் குளித்துத் தோழிகள் து விய வர்ணப் பொடிகள் நெற்றி, கன்னம், மார்பு மேடுகளில் கறை படிய, துரத்தும் சிரிப்புக்கு ஒளிந்து, தன் சிரிப்புக் காட்டி, மார்வாரி மங்கை களவு காட்டு கிறாள்.

சட்டென்று கண்ணுக்குப் படாமல் அதைச் சூழ்ந்த கமுகு, தென்னை, கொய்யா நடுவில் பதுங்கி, கூரை விளிம்பு மட்டும் எட்டிப் பார்த்துக் கொண்டு, ஒளிவு மறைவில் ஒளிச்சிரிப்புடன் வீடு, பார்வைக்கு எழுந்தது. பின்னால், உத்யோக முறையில், நாலு இடம் போய் நாலு பேரோடு பழக தேர்ந்த போது ஹோலி பார்த்தேன். முன்னால் கண்டது. சில சமயங்களில் பின் கண்டது ருக.

சில சமயங்கள், முன் கண்ட பொருள் பின்வந்த இருளுக்கு விளக்கு ஆட்டுகிறது.

நீலச்சுடர் நெய்விளக்கு க-9