பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு 7

வரவில்லை என்று. சொல்வேன். நாக்கு விஷயத்தில் அவள் தனிச்சிகரம். அந்தக் கடுத்த நாட்களில் என் அவலத்தை எனக்கு அவ்வப்போது நினைவுபடுத்துவதில் ராஜா. புடவை கட்டியிருந்தாளே ஒழிய அவள் பெண்பால் இல்லை. ஆண்பாலும் இல்லை. ஏனெனில் ஆணும் அவளுக்கு அந்தநாளிலேயே அஞ்சும்.

வெளியிடப் பயந்து உள்ளே அமுக்கிவிட்ட எண்ணங் கள மேல்கூட எப்படித்தான் அவளுக்கு ஸெர்ச்லைட் அடிக்குமோ ? அதுவும் அவள் வாயிலிருந்து வெளிப் படும் போது, சுவரோரம் உடல் நடுங்கும் எலிபோல், குற்றவாளி, பதுங்கவேண்டியதுதான். கு ற் ற வ எளி அவளுக்கு அகப்பட்டவன் நான் தான். -

உருளையாய், அசிங்கமாய், பயத்தில் உடல் வெட வெடவென உதறிக்கொண்டு...

எவி.

“என்னடா முகம் சுளிக்கறெ கட்டெறும்பும் கரப்பான் பூச்சியும் மிதந்தால் தள்ளிட்டுக் கொட்டிக் கறது. தவிடுதின்கறத்துலே ஒய்யாரமோ? உனக்கோசம், பழையத்து மூலைக்குத் தனிவிளக்குப் போடமுடியுமா ? அதென்ன நாக்கு நாங்கள் எல்லாம் அப்படித்தான் வளர்ந்தோம் சின்னவயசிலே கடவுள் என்னைத் தலை யைத் தடவிட்டானே தவிர, வயத்திலே அடிச்சுடல்லே. இந்தத் தண்ணியும் சோறுக்கும் தறுக் தறுக்குனு கடிச்சுக்கப் பச்சை மிளாாய்க்கும் உப்புக்கல்லுக்கும் என்னிக்கும் பஞ்சமில்லை. நீ ஒண்னும் கொம்பில் ஏறிக் குதிச்சுட்டமாதிரி நெனச்சுக்காதே. இப்பவே, எறும்பு, கரப்பான், பல்லி விஷத்தைத் தின்னு பழக்கிண்டால், பின்னால் என்ன விஷம் தீண்டினாலும் ஏறாது. உன் வராச் சாப்பாட்டுக்குக் கூட ஏற்பாடு பண்ணாமல் உன் அப்பனும் ஆயியும் சேர்ந்தாப்போல் காவேரிலே போனாளோ, அந்தி லக்ஷணத்துக்கு, இந்தத் திருடனின்