பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 லா. ச. ரா.

மறுபடியும் அந்த உடம்பு ஒடுங்கிய கைகூப்பல். ‘ஐயா என்னை என்ன வேனுமானாலும் நெனச்சுக் கட்டும் இத்தனியும்- பரவலாய்த் தன்கையை வீசி ‘ஐயா போட்ட பிச்சை வர வாரம் ஐயா வி - ம் ஒரு வரம் கேக்கப் போறேன்.”

“என்ன அஸ்திவாரம் பலமாயிருக்கே, எனக்குப் பகமாயிருக்கே!’

‘ஐயா கருணையிலே அந்த நாளெல்லாம் போயிட் டுது. ஒண்னுமில்லே. இங்கேயே இப்பவே கேட்டுட றேனுங்க. எனக்கு ஐயா போட்டோ வேணும்,’’

‘என்னைப் பூஜையிலே வெக்க என்னய்யா அவசரம்: என் விளக்கு இன்னும் மலை ஏறல்லே நாயக்கரே!’

‘நீங்க ஒண்னு ஐயாவுக்கு இதெல்லாம்கூட ஒரு வேடிக்கையா? பூசையில்தான் வெக்கணுமா? ஆண்ட வனே! தினம் கண்ணால் பார்த்துக்கிட்டு, ‘என்னை வாழ வெச்ச புண்யவான்’னு நெஞ்சார வாழ்த்தக் கூடாதா?’’ - -

‘அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம், பின்னாலே தப்பு தண்டா வரும். எல்லாம் நெனப்புலே இருந்தால் சரி. அதுக்காக இங்கே என்னை விழுந்து கும்பிட வேண்டாம், எழுந்திருமய்யா! வாங்க ஒரு முறை வயலைச் சுத்தி நடப்போம், நேரமாவுது.”

‘நீங்க நடக்கற தூரமாவா இருக்குது. நீங்க கடைசியா வந்து போனப்பறம் அடுத்தாப்பிலே இரண்டு ஏகரா , நமக்கு சொந்தமாயிடுச்சுங்க- அதுக்கும் இந்தத் தண்ணி போவுதுங்க.”

“ஏதேது, நாயக்கரே,நீங்கள் நடத்தறது விவசாயமா, ராஜ்யமா?” .

“எல்லாம் ஐயா ஆசிர்வாதம். ஆனால் ஐயா காலை தான் தொடக்கூட விட மாட்டேன்கறிங்க. அது கிடக்கு