பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு |

சிலந்திக் கூடு நாளுக்கு ஒரு இ ைழ யாக மேலே பின்னிய வண்ணம் .ஆரிதாக கற்பனையில் நீந்தும் பிரம்

வாவா என் கூட்டுக்குள்ளே கண்ணாடியில் முகம்பார்த்து விழியில் மைதீட்டிக் கொள்

இங்கு வந்திருக்கக் கூடாது என்று தினம் தினம் எண்ணிக் கொண்டே சிலந்தி இழை என் மேலும் வெய்து கொண்டே, இருக்கு மிடத்தில் இருந்து கொண்டே யிருக்கிறேன். ஆனால் உண்மையிலேயே யாருக்குத்தான் போக்கிடம் எங்கேயிருக்கிறது ? இருக்குமிடத்திலேயே நாளுக்கு நாள் புதைந்து போகிறோம். மனமும் அணு அணுவாய் ஊக்கமெனும் செயலிழந்து போகிறது. காமுப் பாட்டியிடமிருந்து தப்பி ஓடிவர இருந்த ஆர்வம், இங்கு விட்டு மாறுவதற்கு இல்லை,

என் Savings கணக்கில் தொகை ஏறிக் கொண்டே போகிறது. செலவுக்கு வழியில்லை. மானேஜர் அபத்தியம் பண்ணிக் கொண்டு தானிருக்கிறார். .

‘அட போடா அம்பீ!” அலுத்துக் கொள்கிறார் ‘நான் இனிமேல் நாக்கைக்கட்டி இழுத்துப் பிடிச்சு என்னத்தை வாழறது ?” எனக்கு விழி ததும்புகிறது. ஆனால் நான் என்ன செய்ய?

மானேஜர் என் முதுகில் அறைகிறார். அறை சற்று சூடாய்த்தான் விழுகிறது.

“முத்தையா, பரவாயில்லே. உன் அக்கா மவன் மூக்கைக் காப்பாத்திகிட்டான். பரீrை பாஸ் மட்டு மல்ல, நிறையவே மார்க் வாங்கிட்டானே !”

நானே என்னை யாருக்கும் தெரியாமல் நிமிண்டிப் பார்த்துக் கொள்கிறேன்.