பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 SMrr. F. Tor

“என் அக்கா மவன் இல்லே’ முத்தையா கண்ணைச் கிமிட்டுகிறான். உடனேயே கையைக் கூப்பிக் கொண்டு ஆனால் எந்த நிழல்லே அமர்ந்து எந்த வெளிச்சத்திலே படிச்சான், அதையும் கவனிக்கணுமல்லே ?”

கண்ணெரிய, மூளை கொதிக்க, இரவே பகலாய், பகலே இரவாய்.

கண்ட இடம், கிடைத்த நேரம் என எப்போது படித்தேன் ? எப்படிப் படித்தேன் ?

எப்போது பரீrைக்கு உட்கார்ந்தேன் ? எப்படித் தேறினேன் ? எ ல் லா மே ஒரு விளையாட்டாய்ப் போயிற்று.

‘இனி மேல் எப்படிங்க அவன் என் அக்கா மவன் ஆவான் ? அம்பீ எப்பவோ ஜாதி மாறியாச்சே !”

விஷ்ணு சக்ரம் போல் அத்தனை பேருக்கும் ஒரே சிரிப்பு சீறி தன் மத்தாப்புவைக் கொட்டிக் கொண்டு சுற்றி வருகிறது. நானும் சிரிக்கிறேன். ஆனால் நெஞ்சடியில் ஏதோ விரிசல் கண்டு கண்ணிர் கசிகிறது. கண்ணுக்கு வரவில்லே.

அம்மா : அப்பா ! என்று பேர் சொல்லி இந்த சமயத்தின் பெருமையைப்பட்டுக் கொள்ளக் கூட நீங்கள் இல்லை.

“சிவராமா, என்ன மொண மொன ?” “ஒண்ணுமில்லே சார்-’ “சும்மா சொல்லு-’’

‘நான் என்ன லார் கேட்கப் போறேன் ? அல்வா, நெய்கடலைதான் !’

“அல்வா நெய்கடலை என்ன முத்தையா, பாலாஜி கபே ப்ரொப்ரைட்டரை வரச்சொல்லு. நாளை ராத்திரி, பாங்க் மொட்டை மாடியிலே நிலாச்காப்பாடு."